HT Love Education: ரிலேஷன்ஷிப்ல மூன்றாவது நபரால் பிரச்சினையா?.. அதன் எல்லை என்ன?.. எமோஷனை ஹேண்டில் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ht Love Education: ரிலேஷன்ஷிப்ல மூன்றாவது நபரால் பிரச்சினையா?.. அதன் எல்லை என்ன?.. எமோஷனை ஹேண்டில் செய்வது எப்படி?

HT Love Education: ரிலேஷன்ஷிப்ல மூன்றாவது நபரால் பிரச்சினையா?.. அதன் எல்லை என்ன?.. எமோஷனை ஹேண்டில் செய்வது எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Updated Mar 26, 2024 07:45 AM IST

“அந்த ஹெல்தி சாய்ஸ நாம எடுத்துக்கும் போது, அதன் மூலமா உங்களுக்கு ஒரு ரிலாக்ஸ் கிடைக்கும். நீங்க கொஞ்சம் நார்மல் ஆவீங்க.. அந்த மைண்ட் செட் திரும்பவும் உங்க பார்ட்னர்ட்ட புரிதலோட, பொறுமையா பேசுறதுக்கு உதவும். இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆனா, அந்த ஹெல்தி சாய்ஸலதான் இன்னைக்கு பிரச்சினை”

காதல் பழகு கண்மணி!
காதல் பழகு கண்மணி!

மேகம் எல்லாம் காகிதம்…

வானின் நீலம் கொண்டு வா…

பேனா மையோ தீா்ந்திடும்…” என ஆதாம் ஏவாள் காலம் தொட்டு, இன்று வரை மானுட மனதிற்குள் பின்னி பிணைந்து கிடக்கும், காதல் நிகழ்த்தும் அற்புதங்கள் அனைத்தும் ஆச்சரியமானவை.. முதல் சந்திப்பில் நடுங்கி... முத்த சந்திப்பில் ஒடுங்கி.. போர்வைக்குள் நடுக்கும் காம களியாட்டங்கள் முடிந்த பின்னர்தான், மொத்த பிரச்சினைகளும் முச்சந்திக்கு வருகின்றன.

 

நீ இப்படி பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல... உனக்கு நான் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறேன்.. ஆனா நீ.. அவனுக்காக நான் என்னல்லாம் பண்ணிருக்கேன்னு தெரியுமா...? அவ முன்னாடி மாறி இல்லடா… அய்யோ எப்பவும் சந்தேகம்... சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவ்வளவு கோபம்ங்க… என இன்றைய அன்பு பரிமாற்றத்தில் எத்தனை கேள்விகள். இவைகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாத ஜோடிகள் கடைசியாக முட்டி நிற்பது என்னவோ பிரேக் அப் எனும் முட்டுச்சந்தில்தான்..

முன்பு போல் இல்லை.. இன்றைய காலத்தில் உறவுகளை கை கொள்ளவும், பாதுகாத்து கொண்டு செல்வதற்கும் ஆழமான புரிதல் தேவை படுகிறது. அந்த புரிதலை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிதான் இந்த தொடர்..

 

முதல் கேள்வியாக, ஒரு ரிலேஷன்ஷிப்பில் மூன்றாவது நபரின் தலையீடு எந்த அளவுக்கு இருக்க வேண்டும்..? அவர்களின் எல்லை என்ன? என்பதை தெரிந்து கொள்ள அப்பல்லோ மருத்துவனையின் உளவியல் நிபுணர் மருத்துவர் பார்கவ் ஸ்ரீவேலு அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் பேசும் போது, “முன்பெல்லாம் கல்யாணம் அப்படிங்கிறது ஒவ்வொருத்தரோட வாழ்க்கையின் மையப்புள்ளியா இருந்துச்சு. கல்யாணத்த வச்சுதான் அடுத்து வரக்கூடிய வாழ்க்கைய அவங்க திட்டமிட்டாங்க.

ஆனா இன்னைக்கு அப்படி இல்ல; கல்யாணம் வாழ்க்கையோட ஒரு அங்கமா மாறிடுச்சு. இன்ன பிற அங்கங்களாக, சோசியல் லைஃப், புரோஃபஷனல் லைஃப் அப்படின்னு நிறைய வந்திடுச்சு. ஆப்ஷன்களும் வதவதன்னு கொட்டிக்கிடக்கு; கூடவே போட்டிமனப்பான்மையும், கம்பேர் பண்ணி பார்த்துக்கொள்ளும் தன்மையும் அதிகமாகிடுச்சு.

ஒரு ரிலேஷன்ஷிப்ல தொடர்ச்சியா சண்ட வந்துகிட்டே இருந்துச்சு அப்படின்னா, அத சரி பண்ணி, முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பொறுமை இன்னைக்கு பெரும்பான்மையானோர்ட்ட இல்ல. காரணம், அவங்க இன்ன பிற அங்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கு.

இன்னொன்னு, ரிலேஷன்ஷிப்ல ஆணுக்கும், பெண்ணுக்கும் நிறைய சாய்ஸ் இருக்கு. பார்ட்னர் கூட இன்னைக்கு வீட்ல சண்ட வந்துச்சுன்னா... ஆஃபீசில என்ன டல்லா இருக்கீங்க... வாங்க ஒரு காஃபி சாப்பிட போலாமேன்னு கேக்குறதுக்கும், பிரச்சினையை அலசுறதுக்கும், ஆறுதல் சொல்றதுக்கு இன்னொரு நபர் நிச்சயம் இருப்பார்.

இந்த மாதிரியான சமயங்கள்ல, கணவன் முன் வந்து பேசலனா கூட பராவாயில்ல.. எனக்கு என்னோட பர்சனல் விஷயங்கள ஷேர் பண்றதுக்கு இன்னொரு சாய்ஸ் இருக்கு அப்படிங்கிற எண்ணம் அவங்களுக்கு இயல்பாவே வந்துடும். அந்த சாய்ஸ் இருக்குறதுல்ல தப்பு இல்ல. ஆனா அந்த சாய்ஸ் ஹெல்தியான சாய்ஸா இருக்கான்னு பாக்குறது ரொம்ப முக்கியம்.

அந்த ஹெல்தி சாய்ஸ நாம எடுத்துக்கும் போது, அதன் மூலமா உங்களுக்கு ஒரு ரிலாக்ஸ் கிடைக்கும். நீங்க கொஞ்சம் நார்மல் ஆவீங்க.. அந்த மைண்ட் செட் திரும்பவும் உங்க பார்ட்னர்ட்ட புரிதலோட, பொறுமையா பேசுறதுக்கு உதவும். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

ஆனா, அந்த ஹெல்தி சாய்ஸலதான் இன்னைக்கு பிரச்சினை.ஹெல்தி சாய்ஸ் எப்படி இருக்கணும் அப்படிங்கிறதுக்கு ஒரு வரைமுறை இருக்கு... ஒரு எல்லை இருக்கு. உங்க ஹெல்தி சாய்ஸ் ஆணாகவும் இருக்கலாம் அல்லது பெண்ணாகவும் இருக்கலாம்… அவர்களுடனான உரையாடல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்கும் மிக பர்சனலான விஷயங்கள ஷேர் பண்ணக்கூடாது.

ரிலேஷன்ஷிப்ல கம்யூனிகேஷன் அப்படிங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். சண்ட வந்த கொஞ்ச நேரத்துலேயே பேசலனாலும் பராவாயில்ல... கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க.. அப்புறமா பேசுங்க

என்கிட்ட வர்ற சில தம்பதிகளுக்கு நடுவுல சண்டை கூட வந்திருக்காது. கேட்டா ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இண்ட்ரஸ்ட் இல்லாம போயிடுச்சுன்னு சொல்லுவாங்க.. அதாவது சலிப்புத்தட்டுதல்.

ரிலேஷன்ஷிப்ல பிரச்சினை வந்திடுச்சு அப்படின்னா.. உங்களுக்குள்ள இருக்குற எமோஷன அப்படியே உள்ள போட்டு அமுக்கி, புழுங்க வேணாம். அந்த இடத்த விட்டு நகர்ந்து, நீங்க நார்மல் ஆகுறதுக்கு தேவையான விஷயங்கள செய்ங்க... அது ஒரு கார் ரைடு, சினிமா அப்படின்னு எதுவா வேணாலும் இருக்கலாம். அதுக்கு அப்புறமா அந்த பிரச்சினைய கையாளுங்க..

ஒரு வேளை பிரச்சினை ரொம்ப காலமா நீடிக்குது அப்படின்னா.. தயங்காம மேரேஜ் கவுன்சிலர்ட்ட போய் பிரச்சினைய சொல்லி, அத களைவதற்தான நடவடிக்கைகள எடுக்கணும். ” என்று பேசினார்.. காதல் பழகுவோம்..!

மருத்துவர் விபரம்: 

Dr.Bhargav Sirivelu

Consultant psychiatrist

Veeras hospital and Apollo hospital

bharghavsirivelu@gmail.com

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.