தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Relationship Is Your Boss A Strict Person Are You Stuck With Him Here Are The Ways To Escape

Relationship : உங்கள் பாஸ் கடுமையான நபரா? அவரிடம் சிக்கி திண்டாடுகிறீர்களா? தப்பிக்க இதோ வழிகள்!

Priyadarshini R HT Tamil
Mar 24, 2024 03:04 PM IST

Relationship : கடுமையாக நடந்துகொள்ளும் உங்கள் பாஸை கவரும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Relationship : உங்கள் பாஸ் கடுமையான நபரா? அவரிடம் சிக்கி திண்டாடுகிறீர்களா? தப்பிக்க இதோ வழிகள்!
Relationship : உங்கள் பாஸ் கடுமையான நபரா? அவரிடம் சிக்கி திண்டாடுகிறீர்களா? தப்பிக்க இதோ வழிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

பொறுப்பு எடுங்கள்

பணியில் பல்வேறு பொறுப்புக்களை எடுத்துக்கொள்ளுங்கள். பணிகள் குறித்து பொறுப்பெடுத்துக்கொள்வது மற்றும் குழுவுடன் இணைந்து செயல்படுங்கள். இவையெல்லாம் பணியில் நீங்கள் எவ்வளவு உறுதியாக செயல்படுகிறீர்கள் என்பதை உணர்த்தும். எனவே இவற்றை செய்யுங்கள்.

தலைமைப்பண்பு

உங்கள் பாஸிடம் இருந்து உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், உங்களுக்கு தலைமைப்பண்புகள் மிகவும் அவசியம். உங்கள் முழு குழுவையும் நீங்கள் சமாளிக்கக் கூடிய திறமைபெற்றவர்களாகவும், கண்காணிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். உங்களிடம் இந்த திறமைகள் இருந்தால் போதும், உங்கள் பாஸை கட்டாயம் கவர்ந்திழுக்க முடியும்.

உங்களின் ஃபீட்பேக் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் பாஸ் சொல்வதை கேட்டு அப்படியே நடப்பது, அவரின் அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை அப்படியே பின்பற்றுவது உங்களை அவருக்கு பிடித்தவராக மாற்றும். அவர்களிடம் ஃபீட்பேக் கேட்கும்போது அவர்களின் வார்த்தைகளை நீங்கள் பெருமளவு மதிக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு புரியும். அவர்களிடம் இருந்து கற்கும் ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்பதும் தெரியவரும். எனவே ஃபீட்பேக் கேட்பது நீங்கள் வளர உதவும்.

சரியான நேரத்திற்கு செல்லுங்கள்

உங்கள் பணிக்கு காலையிலேயே வந்துவிடுவது நல்லது. அது நீங்கள் பணியில் எந்தளவுக்கு உறுதியுடன் செயல்படுகிறீர்கள் என்பதை காட்டுகிறது. நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் வேலைகளை துவங்குவது பணியின் மீது உங்களின் அக்கறையை காட்டுகிறது.

யோசனை கொடுங்கள் மற்றும் புதியவற்றை செய்யுங்கள்

புதிய யோசனைகளை கூறுவதும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதும் சிறந்த பழக்கங்கள். இவற்றை பாஸ்களும், மேனேஜர்களும் பாராட்டுவார்கள். வாடிக்கையாளர்களை மூளைச்சலவை செய்வது, பிரச்னைகளுக்கு தீர்வு கொடுப்பது மற்றும் கிரியேட்டிவான மனநிலை என அனைத்தும் நல்ல லாபம் மற்றும் வெற்றியைப் பெற்றுத்தரும்.

செயல் ஊக்கமுள்ளவர்களாக இருங்கள்

நல்ல செயல் ஊக்கமுள்ளவர்களாக இருப்பது மற்றொரு மனநிலை, அது உங்கள் பாஸின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவுகிறது. காலக்கெடுவுக்குள் உங்கள் பணிகளை முடிக்க வேண்டும். முக்கியத்துவம் மற்றும் திட்டமிடுதல் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு தாமதமின்றி செய்வது என இருந்தால், உங்களை உங்கள் பாஸ்க்கு கட்டாயம் பிடிக்கும்.

வெற்றி முகம் காட்டிக்கொண்டிருங்கள்

உங்கள் வெற்றிகள், சாதனைகள் என தொடர்ந்து செய்து உங்களின் திறமையை நிரூபித்துக்கொண்டிருங்கள். தினசரி வேலைகளையும் செய்து முடியுங்கள். உங்கள் கடுமையான பாஸை கவர்வதற்கு இது உங்களுக்கு உதவும். எனவே உங்கள் குழுவில் உள்ளவர்களின் சாதனைகளின் பட்டியல்களையும், தேவையான மாற்றங்களையும் வெளிச்சமிட்டு காட்டுங்கள். பணியுடன் கூடுதலாக உங்கள் சாதனைகளையும் பட்டியலிடுங்கள்.

பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் 

உங்கள் பாஸ் அல்லது மேனேஜருடன் தொடர்புகொள்ளும்போது, ப்ரொபஃஷனலாக நடந்துகொள்ளுங்கள். சரியான தொடர்பில் இருங்கள். எப்போது முக்கிய இமெயில்கள், மீட்டிங்குகள் மற்றும் மெசேஜ்களுக்கு உடனடியாக பதில் கொடுங்கள். அதனுடன், தேவையற்ற விடுப்புக்களை எடுக்காதீர்கள். பணியில் நீங்கள் தொடர்ந்து வேலை செய்வது, உங்களின் வேலையில் நீங்கள் சரியாக இருப்பதை காட்டும். எனவே இவற்றை பின்பற்றி உங்கள் பாஸை கவர்ந்திழுத்து பணியில் சிறக்க வாழ்த்துக்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்