RelationShip : குழந்தையின்மை உங்கள் உறவையே பாதிக்குமா? அதை கையாள்வது எப்படி?
Relationship : தம்பதிகளின் ஒற்றுமை குலைவதற்கு குழந்தையின்மையும் ஒரு காரணமாக அமைகிறது. குழந்தையில்லாத காலத்தில் நீங்கள் எவ்வாறு உங்களின் உறவை எப்படி பேண வேண்டும் என்பதற்கான டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தையின்மை தம்பதியரிடையே இன்று பொதுவான ஒரு பிரச்னையாக உள்ளது. ஓராண்டுக்குப்பின்னரும், பாதுகாப்பற்ற உடலுறவால் குழந்தை பெறாமல் இருப்பது குழந்தையின்மை என்று அழைக்கப்படுகிறது. 2023ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி உலகம் முழுவதில் 6ல் 1 தம்பதி குழந்தையின்மையால் அவதிப்படுகிறார்கள். இது தம்பதிகளுக்கு சவாலான காலகட்டமாக உள்ளது.
தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் இந்த பிரச்னை குறித்து கண்டுபிடிக்கப்படும்போதோ, பிரச்னைகள் ஏற்பட துவங்கிவிடுகிறது. முதலிலே இது உளவியல் மற்றும் உணர்வு ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. துவக்க காலத்தில் தம்பதிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். குழப்பங்கள், விரக்தி, கோவம், துக்கம், துன்பம், பாதிக்கப்பட்டவர்கள் போன்ற மனநிலை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இது இறுதியில் உங்கள் தன்னம்பிக்கையை குலைத்துவிடும். இது நிறைய தம்பதிகளிடையே பிரச்னைகளை எற்படுத்துகிறது. நீண்ட காலமாக குழந்தையில்லையென்றால், அது உங்களின் பாலியல் செயலின்மைக்கு வழிவகுக்கிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது. சமூகத்தில் இருந்து தனித்து விடப்படுவீர்கள்.
ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொள்வீர்கள். இதனால் தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். இது குற்றஉணர்வை ஏற்படுத்தும். மருத்துவ ரீதியாக ஒருவரிடம் உள்ள குறை வெளிபட்டுவிட்டால், அந்த நபர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாவார். இது துவக்கத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தாவிட்டாலும், நாளடைவில் பிரச்னைகளை உண்டாக்கும். இதனால் உறவு வறண்டு போகும். எனவே குழந்தையின்மை ஏற்படும்போது, எப்படி உங்கள் உறவை மேம்படுத்த வேண்டும் என்ற தெரிந்துகொள்ளுங்கள்.