Relationship : காத்திருந்திருந்தால்தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்! உறவில் பொறுமை ஏன் அவசியம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : காத்திருந்திருந்தால்தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்! உறவில் பொறுமை ஏன் அவசியம் தெரியுமா?

Relationship : காத்திருந்திருந்தால்தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்! உறவில் பொறுமை ஏன் அவசியம் தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Updated Jul 25, 2024 02:16 PM IST

Relationship : காத்திருந்திருந்தால்தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும் என்பது உண்மையா? உறவில் ஏன் பொறுமையாக இருக்கவேண்டும்? அதன் அவசியம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Relationship : காத்திருந்திருந்தால்தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்! உறவில் பொறுமை ஏன் அவசியம் தெரியுமா?
Relationship : காத்திருந்திருந்தால்தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்! உறவில் பொறுமை ஏன் அவசியம் தெரியுமா?

தருணங்களை நினைவுகளாக்குங்கள்

ஒரு அழகான உறவில், நம்பிக்கை, சந்தோஷம், பகிரப்பட்ட கனவுகள், ஒருவருக்கொருவர் தரும் ஆதரவு மற்றும் அன்பு பரிமாற்றம் ஆகியவைதான், சாதாரண தருணங்களைக் கூட நினைவுகள் ஆக்குகின்றன.

அனுதாபம் பழகுங்கள்

உங்களின் நிலையை உங்கள் பார்ட்னரின் நிலையில் பொருத்தியும், உங்கள் பார்னரின் நிலையை உங்கள் நிலையில் பொருத்தியும் பாருங்கள். அவர்களின் கோணத்தையும் புரிந்துகொள்ளுங்கள். அனுதாபத்தின் மூலம் பொறுமையை வளர்த்தெடுங்கள்.

திறந்த உரையாடல்

உங்கள் உணர்வுகள் மற்றும் அக்கறைகள், தேவைகள் என அனைத்து குறித்தும் திறந்த உரையாடல் மிகவும் அவசியம். இது உங்களுக்கு புரிதலை அதிகரிக்கிறது. மேலும் விரக்தியைக் குறைக்கிறது. எப்போதும், ஒரு உறவில் ஒளிவு மறைவு என்பது இருக்கக் கூடாது. வெளிப்படைத்தன்மைதான் உறவுக்கு அடித்தளம் அமைக்கிறது.

உண்மை எதிர்பார்ப்புகள்

உண்மையற்ற, நடக்காத எதிர்பார்ப்புகளை தவிர்க்கவேண்டும். இரண்டு பார்ட்னருக்கும் வளர்ச்சி மற்றும் பின்னடைவு இரண்டும் இருக்கும். நிறை மற்றும் குறைகள் இருக்கும். எனவே அதன் அடிப்படையில் எட்டக்கூடிய எதிர்பார்ப்புகளை வகுத்துக்கொள்வது அவசியம். உண்மையில்லாத எதிர்பார்ப்புகளை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டால் அது உங்கள் உறவில் மனகசப்பு மற்றும் பிரிவை ஏற்படுத்துகிறது.

தீர்வுகளில் கவனம்

நீங்கள் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தீர்வுகளை நோக்கி பயணிக்க துவங்குங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கையில் அமைதி நிலவும். இல்லாவிட்டால், பிரச்னைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருந்தால் எந்த பயனும் இருக்காது தீர்வுகள்தான் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

மனநிறைவு தியானம்

மனநிறைவு கொள்வதன் மூலம் பொறுமை என்பதை தேர்ந்தெடுங்கள். அதற்கு நீங்கள் தியானம் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம். உங்கள் உறவில், நீங்கள் நிலைத்திருக்க என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும்.

நேரம் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வை எதிர்பார்க்காதீர்கள். சில பிரச்னைகளுக்கு ஆழ்ந்த புரிதலும், நேரமும் தேவைப்படும். எனவே அதற்கு அதை கொடுப்பதுதான், பிரச்னைகள் முற்றிவிடாமல் தடுக்கும். எனவே, உங்கள் பிரச்னைகளுக்கு நேரம் கொடுக்க கற்றுக்கொடுங்கள்.

உங்கள் மீதான அக்கறை முக்கியம்

உங்கள் உணர்வுகள் மற்றும் நலன் என்பது மிகவும் முக்கியம். எனவே உங்களுக்கு நேரம் ஒதுக்குவதை உறுதி செய்யுங்கள். உங்களை கவனித்துக்கொள்வதால், உங்களுக்கு பொறுமை மற்றும் மீண்டு எழும் திறன் அதிகரிக்கிறது. எனவே உங்கள் மீது அக்கறை காட்டுங்கள். அன்பு, பாசம், பரிவுடன் நடந்துகொள்ளுங்கள்.

வித்யாசத்தை புரிந்துகொள்ளுங்கள்

உங்களின் தனித்தன்மை மற்றும் உங்கள் பார்ட்னரின் தனித்தன்மை என்ன என்பது குறித்து அறிந்து அவற்றை வளர்விடவும், பாராட்டவும் கற்றுக்கொள்ளுங்கள். இதை இருவரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி செய்துகொள்ளவேண்டும். பொறுமையுடன், வித்யாசங்கள் குறித்து பேசுங்கள்.

அவரவருக்கான இடம் ஒதுக்குங்கள்

உங்கள் இருவருக்கும் இடம்கொடுங்கள். இருவருக்கும் தேவையான இடத்தை கொடுங்கள். இருவரின் வளர்ச்சியும் அவசியம். உறவில் தனிப்பட்ட இடம் என்பது மிகவும் தேவை. பொறுமையை வளர்த்தெடுங்கள், ஒவ்வொருவரின் பயணத்துக்கும் மரியாதை கொடுங்கள். ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சியை பாராட்டுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.