Relationship : உங்கள் பார்ட்னரின் தனிப்பட்ட இழப்பை சமாளிப்பது எப்படி? இந்த வழிகளில் நீங்கள் உதவலாம்!
Relationship : எனவே அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்து அதை கட்டாயம் செய்ய முயற்சியுங்கள். ஏனெனில், நீங்கள் தரும் சிறு ஆறுதல் கூட அவர்களின் துயர் துடைக்கும் பெரும் விஷயமாக அமையலாம்.

உங்கள் பார்ட்னர் தனிப்பட்ட இழப்பை சந்தித்துவிட்டால் என்றால், அதை சமாளிப்பது எப்படி என்று பாருங்கள். அவர்களின் இழப்பை ஈடுகட்ட முடியாவிட்டாலும் அந்த நேரத்தில் தேவைப்படும் ஆறுதலைக் கொடுக்கவேண்டியது ஒரு பார்ட்னரின் கடமையாகும். எனவே அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்து அதை கட்டாயம் செய்ய முயற்சியுங்கள். ஏனெனில், நீங்கள் தரும் சிறு ஆறுதல் கூட அவர்களின் துயர் துடைக்கும் பெரும் விஷயமாக அமையலாம்.
எந்த உதவியையும் வழங்க தயாராகுங்கள்
உங்கள் பார்ட்னருக்கு நீங்கள் எந்த உதவியை வேண்டுமானாலும் செய்ய தயாராகுங்கள். நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று பாருங்கள். குறிப்பிட்ட தீர்வுகளை அவர்களுக்கு கொடுக்க முடியுமா என்று பாருங்கள். பொதுவான தீர்வுகளாக அல்லாமல் அவை குறிபிட்ட தீர்வுகளாக இருக்கும்போது அவர்களுக்கு நல்லது.
தெரபியை வலியுறுத்துங்கள்
அவர்களுக்கு தேவைப்பட்டால் தெரபி எடுத்துக்கொள்ள வலியுறுத்துங்கள். எனினும் அவர்களுக்கு தேவை என்றால் அவர்களே அதை முதலில் கேட்கட்டும். எனினும் நீங்கள் அவர்களுக்கு எவ்வித ஆதரவும் கொடுக்க தயாராகுங்கள்.