Relationship : உங்கள் காதலில் நம்பிக்கை முற்றிலும் வற்றிவிட்டதா? அதற்கான காரணங்களை பாருங்கள்!
Relationship : உங்கள் காதலில் நம்பிக்கை முற்றிலும் வற்றிவிட்டதா? அதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் காதல் உறவில் நம்பிக்கையை கொண்டுவருவதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்!
உறவில் நம்பிக்கை என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. இதுதான் இணையர், குடும்பங்கள் மற்றும் நண்பர்களை ஒன்றாக இணைக்கிறது. பாதுகாப்பு உணர்வக் கொண்டுவரும். பரஸ்பர மரியாதை மற்றும் நெருக்கத்தை கொண்டுவரும். நம்பிக்கை ஒருமுறை உடைந்துவிட்டால், அதை மீண்டும் மீட்டெடுப்பது கடினம். நம்பிக்கைதான், நீண்ட நாள் உறவுக்கு மற்றும் வலுவான தொடர்புகளுக்கு மிகவும் அவசியம்.
ஒரு உறவில் நீங்கள் நம்பிக்கையை இழப்பதற்கான காரணங்கள்
தொடர்புகொள்வது குறைவது
திறந்த உரையாடல் மற்றும் ஆழ்ந்த உரையாடல் உறவில் நம்பிக்கையை வளர்த்தெடுக்கிறது. உரையாடல் குறைந்து புரிதலின்மை ஏற்பட்டுவிட்டால், ரகசியம் மற்றும் பேசி தீர்க்காத பிரச்னைகள், சரியான புரிதலின்மை மற்றும் சந்தேகம் என அனைத்தும் நம்பிக்கையின் அடித்தளத்தை அசைத்து பார்த்துவிடும்.
உடைந்த வாக்குறுதிகள்
அர்ப்பணிப்புடன் நடந்துகொள்வது பொறுப்புணர்வைக் கொண்டுவருகிறது. இது உறவில் பொறுப்புடன் நடந்துகொள்ள தூண்டுகிறது. இந்த வாக்குறுதிகளை நாம் தொடர்ந்து புறக்கணித்து வந்தால், அது உறவில் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாக்குறுதிகளை உடைப்பது, நம்பிக்கை மற்றும் நேர்மையை கேள்விக்குறியாக்குகிறது. இணையர்களை ஏமாற்றியவர்களாகவும், தகுதியற்றவர்களாகவும் மாற்றுகிறது.
துரோகம் மற்றும் ஏமாற்றுதல்
துரோகம்தான் நம்பிக்கையை முதலில் தகர்க்கிறது. இது உறவின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிறது. இதிலிருந்து மீள்வது மிகவும் சவாலானது. கட்டுப்பாடு, மாற்றிக் கூறுவது, தகவல்களை பரிமாறாதது என அனைத்தும் உறவை பாதிக்கிறது. துரோகம், உடல்ரீதியாக அல்லது மனரீதியாக என எதுவாக இருந்தாலும், நம்பிக்கை மற்றும் விசுவாசம் ஆகிய அனைத்தையும் உறவில் தகர்க்கிறது.
கடந்த கால அதிர்ச்சி
கடந்த கால உறவு, குறிப்பாக அவர்கள் ஏற்படுத்திய காயங்கள், ஆற்றமுடியாத அதிர்ச்சி என அனைத்தும், தற்போதைய உறவில் ஒரு நிழலை ஏற்படுத்தியிருக்கும். அது உடல் ரீதியான காயங்களாக இருக்கலாம் அல்லது சூழ்ச்சி, என அது ஆறாத வடுக்களாக உணர்வு ரீதியாக உங்களை பாதித்து இருக்கலாம். அதுவும் உங்கள் தற்போதைய உறவில் நம்பிக்கையை குலைக்கலாம்.
அனுதாபம் மற்றும் புரிதல்
ஒவ்வொருவரின் அனுபவத்தில் இருந்து புரிதலை வளர்ப்பது உறவில் வலுவான ஒரு நம்பிக்கையை வளர்த்தெடுக்கும். பரஸ்பர பிணைப்பு மற்றும் ஆழ்ந்த தொடர்பை வளர்த்தெடுக்காவிட்டால், நெருக்கம் குறையும். இது தனிமை உணர்வைத்தரும். ஒவ்வொருவருடனும் இணைந்து வாழும் நேர்மையான ஆசையை அது தகர்க்கிறது.
பொறுப்பு குறைவது
உறவில் பொறுப்பு குறைவது, ஒருவர் மற்றவர் மீது குறைகூறி, சலுகைகளை பெற முயல்வதும் உறவில் விரிசல் ஏற்படுவதற்கு காரணமாகிறது. தங்களின் நடவடிக்கைகளுக்கு தாங்கள் பொறுப்பேற்காதது அல்லது அவர்களின் இணையரின் ஆசைக்கு எதிராக நடந்துகொள்வது என இரண்டும் நல்லது கிடையாது. சூழல்தான் நம்பிக்கையை குலைக்கிறது.
எல்லைகள் குறைவது
எல்லைகள் குறைவது, நம்பிக்கையை இழப்பதில், முக்கிய காரணமாக எல்லைகளைக் கடப்பது உள்ளது. இது ஒரு தனிப்பட்ட நபரின் தனித்தன்மை மற்றும் தேவைகள், தேர்வுகள் ஆகியவற்றில் மறைந்திருக்கும் அழுத்தம் ஆகும். இந்த எல்லைகளை மீறினால், நம்பகத்தன்மை குறைகிறது. உணர்வுரீதியான பாதுகாப்பின்மை குறைகிறது.
உறவில் பிரிவை ஏற்படுத்தும் காரணங்களை தெரிந்துகொண்டு அதை தவிர்க்கும் வழிகளை முயற்சி செய்யுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்