Relationship : ‘என் ஃபிரண்டபோல யாரு மச்சான்’ இதுபோன்ற நட்புகள் கூட உடைவது ஏன்?
Relationship : ‘என் ஃபிரண்டபோல யாரு மச்சான்’ இதுபோன்ற நட்புகள் கூட உடைவது ஏன்?
பழைய நட்புகள் உடைவது ஏன்?
நம்பு, எவ்வளவு பிணைப்புகள் நிறைந்தது. எதிர்பாராத பல சவால்களையும் சந்தித்து வருவது. பல்வேறு சூழல்களில் அந்த நட்பும் கலைந்துவிடுகிறது. பல நட்புகளுக்கு இதுபோன்ற சோதனைக்காலங்கள் ஏற்படுகிறது. நீண்ட கால நட்புகளில் பிரிவு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கையில் வேறு பாதைகளில் பயணிக்கும்போது
ஒவ்வொருவரும், எதிர்பாராதவிதமாக ஒவ்வொரு பாதையை தேர்ந்தெடுக்கும்போது, வேலை மாற்றம், தொழில் மாற்றம், இடமாற்றம் அல்லது தனிபட்ட பிரச்னைகள் காரணமாக உடல் மற்றும் உணர்வு ரீதியாக விலகலை சந்திப்பது. இவை ஏற்படும்போது நட்பில் நெருக்கம் குறைகிறது.
தீர்க்க முடியாத சண்டை
தீர்க்க முடியாத சண்டை என்று ஒன்று கிடையாது. தீர்க்க முயலாத சண்டை வேண்டுமானால் இருக்கலாம். கருத்துவேறுபாடுகள், புரிதலின்டை போன்றவற்றால் ஏற்பட்ட வாக்குவாங்கள் முற்றியிருக்கலாம். இதனால் ஏற்பட்ட பிரச்னைகள் தீர்க்கபடாமலே இருந்திருக்கலாம். இது இறுதியின் நட்பை சிதைத்திருக்க முடியும்.
முன்னுரிமைகளில் மாற்றம்
தனிப்பட்ட முன்னுரிமைகளில் மாற்றங்கள் இருந்திருக்கலாம். குடும்பம், உயர்கல்வி, எதிர்காலம், இலக்குகள் என ஒருவர் அவர்களின் நேரத்தையும், சக்தியையும் இவற்றிகாக செலவிடலாம். சில நண்பர்களுக்கு இதை எதிர்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். இதனால் அவர்களுக்கு பிரச்னைகள் ஏற்படலாம்.
போட்டி மற்றும் பொறாமை
நண்பர்களுக்கு மத்தியில் போட்டி இருக்கலாம். ஆனால் அது பொறாமையாக வளர்ந்துவிடக்கூடாது. அது எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும், எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தி அதை பாதிக்கச்செய்யும். நண்பர்களில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால், இது மற்றவரை பாதிக்கும். கட்டாயமாக உறவையே சிதைத்துவிடும்.
சரியான உரையாடல் இல்லாமை
ஒரு கட்டத்தில் நண்பர்களுக்குள் சரியான உரையாடல் இல்லாமல் போனால் கூட நட்பு பாதிக்கப்படும். வழக்கமான, திறந்த மனதுடனான உரையாடல் இன்மை ஒரு தூரத்தையும், பற்றின்மையையும் ஏற்படுத்திவிடும். அது நட்பை எளிதாக குலைத்துவிடும்.
தனிப்பட்ட வளர்ச்சியில் வேறுபாடுகள்
ஒருவர் அவர் சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடையும்போது, ஒரு நண்பர் முக்கியமான வளர்ச்சியை அடைந்தால், மற்றொருவர் ஓரிடத்திலே தேங்கிவிட்டால், அதனால் தொடர் துண்டிக்கப்படும், இதுவும் நட்பை பாதிக்கும்.
நிறைவேறாத எதிர்பார்ப்புகள்
நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் நிறைவேறவில்லையென்றால், இந்த எதிர்பார்ப்புகள் உணர்வு ரீதியான ஆதரவுடன் தொடர்புடையவை அல்லது பகிரப்பட்ட பொறுப்பு எதுவாயினும் அது ஏமாற்றத்துக்கு இட்டுச்சென்று, இறுதியில் விலகலை ஏற்படுத்திவிடுகிறது.
புதிய நட்பு வட்டம்
புதிய நட்பு வட்டம் கிடைத்தவுடன் பழைய நட்பு மற்றும் நண்பர்களை சிலர் மறந்துவிடுவார்கள். பழைய நண்பர்கள் சிலரும் இந்த புதிய நண்பர்கள் கிடைத்தவுடன் ஒதுங்கிவிடுவார்கள். இதனாலும், நட்பில் விரிசல் ஏற்படுகிறது.
மாற்றம்
மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. சில நட்புகளில் மாற்றங்கள் வரும்போது அந்த உறவில் ஏற்படும் விரிசலை சிலர் புரிந்துகொள்ள முடியாமல் போனால், நட்பில் விரிசல் ஏற்படுகிறது. வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கு இடம் கொடுக்காமல் இருப்பதும் நட்பில் பிரிவு ஏற்பட காரணமாகிறது.
வாழ்க்கை மாற்றங்கள்
திருமணம், தாய்மை, அன்பானவர்களின் இழப்பு போன்ற மாற்றங்கள் கூட நட்பில் விரிசல் ஏற்பட காரணமாகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரின் சூழலும், மற்றவருக்கு சவாலான ஒன்றாக உள்ளது. இதனாலும் நட்பில் மெதுவாக விரிசல் ஏற்படுகிறது.
டாபிக்ஸ்