Relationship : நீங்கள் காதலிக்கும் நபர் இவற்றையெல்லாம் தவிர்க்கிறாரா? அச்சச்சோ இது போலியான உறவு! நீங்கள் விலகுங்கள்!
Relationship : நீங்கள் காதலிக்கும் நபர் இவற்றையெல்லாம் தவிர்க்கிறாரா என்பதை பாருங்கள். அப்படியெனில் நீங்கள் போலியான உறவில் சிக்கிக்கொண்டீர்களா என்பதை உறுதி செய்துகொண்டு விலகிவிட முயற்சி செய்யுங்கள்.
உணர்வு ரீதியாக உங்கள் பார்ட்னர் உங்களுடன் இல்லை என்பதை உணர்த்தும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
உணர்வு ரீதியாக உங்களுடன் உங்கள் இணையர் இல்லை
உங்கள் உணர்வகள் குறித்து உங்கள் பார்ட்னர் உங்களிடம் வெளிப்படையான உரையாடவில்லையென்றால், அதையும் தொடர்ந்து செய்து வருகிறார் என்றால், அவர் உணர்வு ரீதியாக உங்களுடன் இல்லை என்று பொருள்.
உணர்வு ரீதியாக உடன் இல்லாமை
அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய வகையில் நடத்தும் உரையாடல்களை தவிர்த்தல், இதுபோன்ற செயல்களை உங்கள் பார்ட்னர் செய்கிறார் என்றால், அவர் உணர்வு ரீதியாக உங்களுடன் இல்லை என்று பொருள். இது உங்கள் உறவில் ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியை உருவாக்கும்.
உணர்வுகளை அளவாக மட்டுமே வெளிப்படுத்துவது
உணர்வு ரீதியாக உங்களுடன் இல்லாத பார்ட்னர், அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்குவார்கள் அல்லது கஷ்டப்படுவார்கள். அவர்கள் அவர்களின் உணர்வுகள் குறித்த உரையாடல்களை தவிர்ப்பார்கள். அவர்களின் உள்ளுணர்வுகள், சிந்தனைகள் மற்றும் அனுபவங்களை புரிந்துகொள்வதில் உங்களுக்கும் அவர்களுக்கும் சவால்கள் இருக்கும்.
பாதிக்கப்படப்கூடியவற்றை தவிர்த்தல்
உங்கள் பார்ட்னர் தொடர்ந்து, பாதிக்கப்படக்கூடிய விஷயங்களை தவிர்த்து வந்தாலோ அல்லது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பகிர்தலை தவிர்த்தாலோ அது அவர்கள் உணர்வு ரீதியாக உங்களுடன் இல்லை என்பதை குறிக்கிறது.
அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உணர்வு ரீதியான இடைவெளியை உங்களுடன் உருவாக்குகிறார்கள் என்று பொருள். இதனால் அவர்களுடன் உங்களால் ஆழ்ந்த தொடர்பை ஏற்படுத்தவே முடியாது.
எதிர்காலம் குறித்து பேச மாட்டார்கள்
எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து திட்டமிடுவதோ அல்லது நீண்ட கால இலக்குகளை ஏற்பதோ செய்ய மாட்டார்கள். இவர்கள் உணர்வு ரீதியான உங்களுடன் இல்லை என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இவை.
இது உங்களுடன் நெருங்கிவிடுவோமோ என்ற அச்சத்திலோ அல்லது இருவருக்கும் ஒரே மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை அவர்களால் கற்பனை செய்ய முடியாமல் போகலாம். அவர்கள் உங்களை விட்டு விலக முனையலாம். எனவே இது ஒரு முக்கிய அறிகுறியாகும்.
உணர்வு ரீதியான ஆதரவு குறைவாக இருக்கும்
அவர்கள் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும் காலங்களில் உங்களுக்கு ஆறுதலாக இருக்க மாட்டார்கள். அவர்கள் உங்களின் உணர்வு ரீதியான தேவைகளை அலட்சியம் செய்வார்கள். உங்களை ஆதரவின்றி விட்டுவிடுவார்கள்.
தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் கஷ்டம்
உங்கள் பார்ட்னர் உணர்வு ரீதியாக உங்களுடன் இல்லாதவராக இருந்தால், அவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து உங்களின் பகிர்ந்துகொள்ள தயங்குவார்கள். அவர்களின் கடந்த காலம், அனுபவங்கள் அல்லது அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களுடன் பேசுவார்கள். ஆனால், ஆழ்ந்த உரையாடலாக அது இருக்காது. மாறாக அவர்கள் மேலோட்டமாக உரையாடுவார்கள். ஆழ்ந்த உரையாடலை தவிர்ப்பார்கள்.
நெருக்கம் குறைவாக இருக்கும்
உறவில் உங்களுக்கு ஆதரவாக உடன் நிற்காத பார்ட்னர் உங்களிடம் உணர்வு ரீதியான நெருக்கமாக இருக்கமாட்டார். அவர் விலகியிருந்தாலோ அல்லது உணர்வு ரீதியான தொடர்புகளை தவிர்த்தாலோ அது உங்களை தனிமைப்படுத்தும், உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.
தற்காப்பு
உறவு அல்லது உங்கள் உணர்வுகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசும்போது, அவர்கள் தற்காத்துக்கொள்ள முயல்வார்கள். உங்கள் பார்ட்னர், அவர்களின் உணர்வுகள் குறித்து கேட்கும்போது அதை கூறமாட்டார். குறிப்பாக உங்கள் உறவின் நிலை குறித்து கேட்டால் அவர் எவ்வித பதிலும் கூறமாட்டார்.
அவர்களிடம் அன்பு இருக்காது
உணர்வு ரீதியாக உங்களுடன் இல்லாத பார்ட்னர், அன்பை பெறுவதிலும், திருப்பித்தருவதிலும் சிரமப்படுவார். அவர்கள் உங்களுடன் பேசுவதில் அல்லது உடல்ரீதியான அன்பைத்தருவதில் அசவுகர்யமாக உணர்வார். நேர்மையான ஒரு உணர்வு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது அவர்களுக்கு சவாலாக இருக்கும்.
டாபிக்ஸ்