Relationship : உங்கள் காதல் அல்லது திருமண உறவை பலமாக்கும் மந்திரம் எது தெரியுமா?
Relationship : உங்கள் காதல் அல்லது திருமண உறவை பலமாக்கும் மந்திரம் எது தெரியுமா?
ஒரு உறவின் வெற்றிக்கு பல்வேறு விஷயங்கள் காரணமாகின்றன. ஆனால் காதல், நம்பிக்கை, ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதை ஆகியவை உங்களின் உறவை பலமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அனுதாபம் உறவுகளில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று அறிந்துகொள்வது அவசியம்.
அனுதாபம் என்பது ஒருவரின் துன்பங்கள் மற்றும் துயரங்கள் குறித்து வருந்துவது. ஒருவரின் நிலைக்கு கொடுக்கப்படும் உணர்வு ரீதியான பதில், அவர்களுக்கு ஆறுதலாக பேசுவது, நடந்துகொள்வதும் ஆகும். அது சிறிது நேரம் மட்டுமே இருக்கக்கூடியது.
என்ன நடந்தது என்பது குறித்து வருந்துவதை நிறுத்திக்கொண்டவுடன் அது போய்விடும் உணர்வு. அது பரிதாபத்தை உள்ளடக்கியது என்பதால், அவர்கள் விரும்பும் நபரிடம் இருந்து பரிதாபத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு தேவை அன்பும், புரிதலும்தான்.
பச்சாதாபம் என்பது பரிதாபம் மற்றும் அனுதாபத்தைவிட மிகவும் ஆழமானது. ஆழமான புரிதல் மற்றும் மற்றவரின் உணர்வு மற்றும் கோணத்தை புரிந்துகொள்வதுடன் பகிர்ந்துகொள்வதும் ஆகும். அவர்களைப்போல் கஷ்டங்கள் ஏற்படும்போது அல்லது ஏற்பட்டால் நீங்கள் அவர்களின் இடத்தில் இருந்து உணர்வதுதான் பச்சாதாபம் கொள்வது ஆகும். பச்சாதாபத்துக்கு, நீங்கள் அவர்களை உற்று கவனிக்க வேண்டும்.
திறந்த மனதுடன் உரையாடல், பலமான உறவின் முக்கியமான கட்டம், பாதிப்பு ஆகிய அனைத்தும் தேவை. பச்சாதாபம் கொண்ட பார்ட்னர், மற்றவரின் வலியை உணர்வதுடன், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும் தருகிறார். அவர்களை எடைபோடாமல் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்.
அனுதாபத்துக்கும் பச்சாதாபத்துக்கும் உள்ள வித்யாசம் என்ன?
உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை கூறி அவர்கள் மட்டும் தனியாக இல்லை. உங்களுக்கும் அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் பச்சாதாபம் கொள்வது. அனுதாபம் என்பது வார்த்தைகளால் ஆறுதல் கூறுவது மட்டுமே, இது மிகவும் கலவையாக உள்ளது அல்லது நான் உனக்காக வருத்தப்படுகிறேன்.
உங்கள் பார்ட்னரிடம், அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்று பாருங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைவிட அவர்களுக்கு என்ன தேவை என்பது மிகவும் அவசியம். அவர்களுக்கு கார்டுகள் அனுப்பவது, மலர்கள் அல்லது சாக்லேட்கள் அனுப்புவது என அவர்களை புரிந்துகொள்ளாமல் அவர்களுக்கு உதவுவது அனுதாபம் எனப்படும்.
நீங்கள் இருவரும் சேர்ந்து எப்படி பிரச்னைகளின் ஆழத்தை கண்டுபிடிப்பது? அவர்களுடன் ஒவ்வொரு படியிலும் இருந்து உதவுவது ஆகியவைதான் பச்சாதாபம் என்பதாகும்.
வாழ்க்கை மிகவும் கடினமானது, உங்களால் முடியும், உங்களால் பிரச்னை என்னவென்று கண்டுபிடிக்க முடியும் என்று வெறும் வார்த்தைகளை மட்டும் கூறுவது அனுதாபம் எனப்படும்.
உங்கள் பார்ட்னரிடம் எப்படி பச்சாதாபத்துடன் நடந்துகொள்ள வேண்டும்?
அவர்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்.
அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவியுங்கள்.
நேர்மையாகவும், திறந்த மனதுடனும் உரையாடுங்கள்.
முடிவுகள் எடுக்கும்போது அவர்களின் உணர்வுகளை கணக்கில்கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை கூறுங்கள்.
இருவரும் ஒன்றாக சேர்த்து தரமான நேரத்தை செலவிடுங்கள்.
தேவைப்படும்போது நேர்மையாக மன்னிப்பு கேளுங்கள்.
ஏற்காதபோதும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
அனுதாபம், பார்ட்னரின் அவதிகளை புரிந்துகொள்வது, பச்சாதாபம் என்பது உங்கள் உறவை ஆழமாக்கவும், பலமாக்கவும் உதவும் திறவுகோல் ஆகும். அனுதாபம் பரிதாப உணர்வுகளைக்கொடுக்கும்.
பச்சாதாபம் கொள்ளும்போதுதான் உங்கள் உறவு மேலும் பலமடைகிறது. புரிதலை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு ஆறுதலைக்கொடுக்கிறது. உங்கள் உறவை வலுவாக்கவும் உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்