தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டீர்களா? உங்கள் பார்ட்னரிடம் பட்டுன்னு இந்த கேள்விய கேளுங்க!

Relationship : திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டீர்களா? உங்கள் பார்ட்னரிடம் பட்டுன்னு இந்த கேள்விய கேளுங்க!

Priyadarshini R HT Tamil
Jun 16, 2024 12:21 PM IST

Relationship : திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டீர்கள் எனில், உங்கள் பார்ட்னரிடம் நீங்கள் என்ன கேள்விகள் கேட்க வேண்டுமென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Relationship : திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டீர்களா? உங்கள் பார்ட்னரிடம் பட்டுன்னு இந்த கேள்விய கேளுங்க!
Relationship : திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டீர்களா? உங்கள் பார்ட்னரிடம் பட்டுன்னு இந்த கேள்விய கேளுங்க!

திருமணத்திற்கு முன் உங்கள் பார்ட்னரிடம் கேட்கவேண்டிய கேள்விகள் இவைதான்.

நம்பிக்கை

நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலி அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமண பார்ட்னர் என யாராக இருந்தாலும், அவர்களுடன் பல்வேறு வகையிலும் திறந்த, நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள உரையாடலை நிகழ்த்த வேண்டும். அப்போதுதான் உங்கள் திருமண பந்தம் நீண்ட நாட்கள் நிலைக்கும். அப்படி எது குறித்துதான் நீங்கள் உங்கள் பார்ட்னரிடம் பேசவேண்டும் என்று தெரிந்துகொள்ள இதோ வழிகள்.

நிதி

திருமணத்திற்கு முன், நீங்கள் செலவிடும் முறை, கடன் இருந்தால் அதுகுறித்தெல்லாம் உங்கள் பார்ட்னருடன் உரையாட வேண்டும். வீட்டி பட்ஜெட்களை எப்படி கையாள்வது மற்றும் அதே பார்வையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார இலக்குகளை எப்படி எட்டுவது என்று பேசவேண்டும். வீடு வாங்குவது, ஓய்வு காலத்திற்கு சேமிப்பது என்பது குறித்து பேசவேண்டும்.

குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள்

உங்கள் இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா? எனில் எத்தனை குழந்தைகள், பெற்றோரின் பொறுப்புகள் குறித்து உங்கள் இருவரின் பார்வை, அவர்களை கவனித்துக்கொள்வது, கல்வி ஆகியவை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் மிகவும் முக்கியம். எனவே தம்பதிகள் இவைகுறித்தும் திருமணத்திற்கு முன்னர் கட்டாயம் பேசவேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

வேலை – வாழ்க்கை சமம்

நீங்களாகவே முடிவு எடுத்துக்கொள்வதைவிட, உங்கள் பார்ட்னரின் வேலை, வேலைக்கான பயணம் குறித்த எதிர்பார்ப்புகள் பற்றி நீங்கள் அவர்களிடம் தெளிவாக பேசி கேட்கவேண்டும். வேலை தொடர்பாக பயணிப்பது குறித்து பேசவேண்டும். உங்கள் இருவரின் பணிப்பொறுப்புகள் குறித்து நீங்கள் இருவரும் பேசவேண்டும். திருமணத்துக்கு பிறகு தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் திருமணத்துக்கு முன்னரே பேசவேண்டும்.

வாழ்வதற்கான ஏற்பாடுகள்

உங்கள் மாமனார் மற்றும் மாமியாருடன் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா அல்லது தனியாக வாழ்கிறீர்களா என்பது குறித்து ஆரம்பத்திலேயே தம்பதிகள் இருவரும் பேசவேண்டும்.

குடும்ப சுதந்திரம்

உங்கள் இருவரின் குடும்பத்தினரும் உங்கள் திருமண வாழ்வில் எந்த எல்லை வரை தலையிடவேண்டும் என்பது குறித்து நீங்கள் நன்றாக முன்னரே பேசிக்கொள்ள வேண்டும். உங்கள் திருமண வாழ்க்கை ஒரு முக்கியமான தலைப்பு, இது உங்கள் உறவில் பெரிய பங்கு வகிக்கிறது. நீங்கள் எப்படி உறவுகளை கையாள்வீர்கள் என்பது குறித்தும் விவாதிப்பது அவசியம். குறிப்பாக மாமனார், மாமியாருடனான உறவு குறித்து பேசிக்கொள்வது அவசியம்.

ஆரோக்கியம் மற்றும் உடல் நலம்

தம்பதிகள் இருவருக்கும் ஏதேனும் உடல் நலக்கோளாறுகள் உள்ளதா என்பது குறித்து விவாதித்துக்கொள்ள வேண்டும். மரபணு தொடர்பான பிரச்னைகள் உள்ளதா, அவை எதிர்காலத்தை பாதிக்குமா என்பது குறித்து இருவரும் கட்டாயம் பேசவேண்டும். கலந்துரையாடி, ஒரே மாதிரியான வாழ்க்கைமுறை கொண்டிருந்தால், அது சாப்பிடுவது, மது உள்ளிட்ட பழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.

பிரச்னைகளுக்கான தீர்வு

ஒவ்வொருவரின் எதிர்வினையாற்றும் தன்மை குறித்து விவாதித்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, சண்டைபோடும்போது பிரச்னைகளுக்கான தீர்வு என்பது மிகவும் முக்கியம். இது புதிய தம்பதிகளுக்கான முக்கிய தேவை.

மதம் மற்றும் ஆன்மீக நம்பிக்கை

மதம் மற்றும் ஆன்மீக நம்பிக்கை தம்பதிகளிடையே பெரும் பிணைப்பை ஏற்படுத்தும். இது உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் குடும்ப வாழ்வு நீண்ட காலம் நிலைத்திருக்க உதவும்.

சமூக வாழ்வு மற்றும் நட்பு

ஒருவரின் குடும்பம் மற்றும் அவர்கள் வீட்டு திருமணத்தில் அவர்களின் ஈடுபாடு குறித்து உரையாடுவது மிகவும் முக்கியம். உங்களின் சமூக தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து அறிவது அவசியம். இருவரின் நெருங்கிய நண்பர்கள் குறித்து தெரிந்துகொள்வது மட்டும் போதாது அதையும் கடந்து இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவேண்டும். இது உங்கள் பார்ட்னரை நன்றாக அறிந்துகொள்ள உதவும்.

தனிப்பட்ட உறவு இலக்கு

தனிப்பட்ட உறவு இலக்குகள் மற்றும் ஒருவர் செய்ய விரும்புவதை அறிந்துகொள்வது, தம்பதிகளிடையே பிணைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக்கொள்ளவும் உதவும். இருவரும் அவர்களின் இலக்குகளை எளிதாக அடையலாம். நீண்ட நாள் உறவு நிலைக்கவும் இது உதவும்.