தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Relationship Are You Newlyweds What To Do To Improve Sex Life Read This First

Relationship : நீங்கள் புதுமணத்தம்பதிகளா? செக்ஸ் வாழ்க்கை சிறக்க என்ன செய்வது? இதை படிங்க முதலில்!

Priyadarshini R HT Tamil
Mar 27, 2024 04:25 PM IST

Relationship : புதுமணத்தம்பதிகளுக்கு செக்ஸில் சில பிரச்னைகள் இருக்கும். அவற்றில் இருந்து விடுபடுவது எப்படி?

Relationship : நீங்கள் புதுமணத்தம்பதிகளா? செக்ஸ் வாழ்க்கை சிறக்க என்ன செய்வது? இதை படிங்க முதலில்!
Relationship : நீங்கள் புதுமணத்தம்பதிகளா? செக்ஸ் வாழ்க்கை சிறக்க என்ன செய்வது? இதை படிங்க முதலில்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் வீட்டில் செய்துவைக்கும் திருமணத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். ஏனெனில் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாது என்பதால் சில தயக்கங்கள் இருக்கும். இதனால் அவர்கள் ஒன்றாவதில் சில சிக்கல்கள் ஏற்படும். எனவே அவர்களுக்கு இடையே உடல் ரீதியான பிணைப்பு ஏற்படுவதற்கு சில காலம் எடுக்கும். அதற்கு சில வழிகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

திருமணத்தில் உடலுறவு ஒரு நெருக்கத்தை காலப்போக்கில் ஏற்படுத்தும். இது தம்பதிகளை உடல் மற்றும் உணர்வு ரீதியாக ஒன்றாக்குகிறது. மனஅழுத்தத்தை போக்குவதில் செக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலில் கார்டிசால் சுரப்பை குறைக்கிறது. செக்ஸ் உங்களுக்கு மகிழ்ச்சி, திருப்தி மற்றும் விடுபடுதல் ஆகிய உணர்வைக்கொடுக்கிறது. அது உங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. எனவே செக்ஸ் தரும் நன்மைகளை தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

புதுமணத்தம்பதிகள் உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறக்க என்ன செய்ய வேண்டும்?

செக்ஸ் குறித்த உரையாடல்

உரையாடல் அவசியம். உங்களுக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் பிடிக்காத விஷயங்கள் குறித்து நீங்கள் பேசிவிடுவது நல்லது. ஒரு ஆரோக்கியமான உரையாடல், நீங்கள் தம்பதிகளாக உருவெடுக்கவும் உதவுகிறது. பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது. இருவரையும் நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது.

செக்ஸ் தொடர்பான பேச்சு உங்கள் உறவில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி, செக்ஸ்வல் திருப்திக்கும் வழிவகுக்கிறது. நீங்கள் செக்ஸ்க்கு முன்னரும், பின்னரும் பேச வேண்டும். இது உங்கள் இணையருக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொள்ள உதவும்.

சூழலை உருவாக்குங்கள்

சுத்தமான படுக்கையறையை தயார்படுத்துங்கள். சில மெழுகுவர்த்திகளை ஏற்றி வையுங்கள். ரொமாண்டிக் இசையை ஓடவிடுங்கள். மனஅழுத்தம் நிறைந்த நாள் அல்லது வாரத்தில் இவ்வாறு செய்வது உங்கள் மனநிலையை மகிழ்வாக்கி பல்வேறு மாற்றங்களை செய்யும்.

செக்ஸ் படங்கள்

உங்களுக்கு ரொமாண்டிக் உணர்வை தரக்கூடிய படங்களைப் பார்க்கலாம் அல்லது கதைகளை படிக்கலாம். உங்கள் இணையருடன் செக்ஸ் கதைகளை படிக்கும்போது அல்லது அதுபோன்ற ஆடியோக்களை கேட்கும்போதும் உங்களின் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்பட்டு உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை நீங்கள் உண்மையாக முயற்சிக்கலாம்.

முன்விளையாட்டு

முன் விளையாட்டு உங்களை முழு செக்ஸ்க்கு தயார்படுத்துகிறது. மேலும் அது தயக்கங்களையும் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது செக்ஸை மேலும் இனிமையாக்கி, இருவரிடையே உணர்வு ரீதியான நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

பதிலளி

செக்ஸின்போது பேசுவது உங்கள் செக்ஸ் இன்பத்தை அதிகரிக்கும். நீங்கள் பேசும்போது உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்கள் இணையர் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்கிறார். அப்போது அவர்கள் உங்கள் மீதும், உங்கள் தேவைகள் மீதும் அதிக கவனம் செலுத்துகிறார்.

கண்களில் பார்ப்பது முக்கியம்

நல்ல செக்ஸ்க்கு இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி மிகவும் அவசியம். நீங்கள் செக்ஸில் ஈடுபடும்போது, முழுமையான நேரத்திலும் இருவரும் ஒருவருடன் ஒருவர் கண்களில் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அப்போது உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

செக்ஸ் பேச்சு

செக்ஸியாக உங்கள் இணையரிடம் பேசலாம். ஆனால் மிகவும் மோசமாக பேசக்கூடாது. உங்களுக்கு எதுபோன்ற பேச்சுக்கள் வேண்டும் என்று உங்கள் இணையரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் விரும்பாத வார்த்தைகளை பேசிவிடாதீர்கள்.

ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்ளுங்கள்

உங்கள் இருவருக்கும் இடையே உடலில் சில அசவுகர்யங்கள் இருக்கலாம். எனவே ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வதால், நீங்கள் பயனடைகிறீர்கள். எனவே அன்பான வார்த்தைகள் உங்கள் இணையரை மகிழ்ச்சியடையச் செய்யும்.

WhatsApp channel

டாபிக்ஸ்