தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Relationship Are You A Temper Tantrum At Work Here Are These Tips For You

Relationship : பணியிடத்தில் கோவத்தில் கொந்தளிப்பவரா நீங்கள்? இதோ இந்த டிப்ஸ்கள் உங்களுக்குத்தான்!

Priyadarshini R HT Tamil
Mar 01, 2024 03:05 PM IST

Relationship : பணியிடத்தில் கோவத்தில் கொந்தளிப்பவரா நீங்கள்? இதோ இந்த டிப்ஸ்கள் உங்களுக்குத்தான்!

Relationship : பணியிடத்தில் கோவத்தில் கொந்தளிப்பவரா நீங்கள்? இதோ இந்த டிப்ஸ்கள் உங்களுக்குத்தான்!
Relationship : பணியிடத்தில் கோவத்தில் கொந்தளிப்பவரா நீங்கள்? இதோ இந்த டிப்ஸ்கள் உங்களுக்குத்தான்!

ட்ரெண்டிங் செய்திகள்

பணியிடத்தில் பொறாமை மற்றும் கோவம்

பொறாமை மிக தீய குணம். அது உங்கள் கோவமடையச் செய்யும் அல்லது சோகத்தில் ஆழ்த்தம். ஆனால், இதுதான் உங்களுக்கு என்ன தேவை என்பதையும் காட்டிக்கொடுக்கும். உங்களைப்பற்றியும், உங்கள் தேவையை பற்றியும் உங்களுக்கு கூறுவது இந்த பொறாமைதான். 

இன்றைய சுயநலமிக்க மனிதர்கள் நிறைந்த உலகில் பணியிடத்தில் பொறாமை மற்றும் கோவம் பொதுவான ஒன்றுதான். எனவே அவற்றை எப்படி எளிதாக கடக்க வேண்டும். அவற்றை கையாள்வது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். அது உங்களின் பணி சிறக்க உதவும்.

உங்கள் உணர்வுகளை பரிசோதியுங்கள்

உங்களிடம் நீங்களே கேளுங்கள், உங்களின் பொறாமை மற்றும் கோவத்துக்கு காரணம் என்னவென்றும், அதற்கான வேர் எதுவென்றும் தெரிந்துகொள்ளுங்கள். அதை மாற்றுவதற்கான படிகளை பாருங்கள், உங்களுக்கு பிடிக்காததை விடுத்து, உங்களுக்க தேவையானதை அடையும் வழிகளை தேர்ந்தெடுங்கள். 

உங்கள் பொறாமை குணத்தை பரிசோதியுங்கள். அது உங்களுக்கு உங்கள் பொறாமை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்பதை புரியவைக்கும். காரணங்களை தெரிந்துகொண்டால், அது உங்களுக்கு எப்படி சரிசெய்யலாம் என்று காட்டும்.

ஒப்பீடு கூடாது

எப்போதும் உங்களுடன் பணிபுரிபவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அது அவர்கள் எவ்வளவு வேலைகள் செய்கிறார்கள் அல்லது அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுகள் என அவர்களுடன் உங்களை எப்போதும் ஒப்பிட்டு பார்த்தல் கூடாது. 

அதற்கு பதில் உங்கள் மீது மட்டுமே நீங்கள் கவனம் செலுத்துங்கள். உங்களின் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அது உங்களுக்கும் நல்லது.

நிகழ் காலத்தில் வாழுங்கள்

நிகழ்காலத்தில் வாழ்வது என்பது உங்களின் நிகழ்காலம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பார்ப்பது. வேறு எந்த எண்ணங்களுக்கும் மனதில் இடம்கொடாமல் தற்போதைய நிலையை மட்டுமே கருத்தில்கொள்வது. 

அது உங்களுக்கு எப்போது கோவம் அதிகரிக்கிறது மற்றும் உங்களின் சிந்தனைகளை உற்றுநோக்குவது மற்றும் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் நிதானமாக நீங்கள் முடிவெடுப்பதற்கு உதவுகிறது. சரியானவற்றை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

நேர்மறையான சுய பேச்சு

உங்களின் எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களை வைத்து, மாற்றுங்கள். உங்களைப்பற்றி உங்களிடம் நீங்களே சரியாக கூறுங்கள். உங்களின் சிந்தனைகளை மாற்றுவதன் மூலம், உங்களின் பார்வைகள் மாறுபடும். இதன்மூலம் உங்களின் பொறாமை மற்றும் கோவம் மாறும். சமமான மனநிலையில் நீங்கள் சூழல்களை தேர்ந்தெடுக்கலாம்.

இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்

உங்களின் உணர்வுகள் மேலெழுந்து கட்டுப்படுத்த முடியாமல் போகிற நிலை ஏற்படும்போது, கோவத்திற்கான காரணம் குறித்து தள்ளியிருங்கள். இது உங்களை அமைதிப்படுத்துகிறது. உங்களின் உணர்வுகளை அமைதிப்படுத்த உதவும். 

உங்கள் சூழலை மாற்றி உங்களின் சமநிலையை காக்க உதவும். உங்களின் சூழலை மாற்றுங்கள் அல்லது உங்களின் மனம் அமைதியடையும் வரை நீங்கள் வெளியில் எங்காவது நடந்து செல்லுங்கள். அந்த சூழல் மாறியவுடன் வந்துகொள்ளலாம். அதுவரை அமைதி காக்க வேண்டும்.

நன்றாக கவனிக்க வேண்டும்

உங்கள் அலுவலகத்தில் யார் பேசினாலும் அவர்களை நன்றாக அதாவது முழுமையாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவர்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் மரியாதை பெறமுடியும். உங்களுக்கு அனுதாபம் கிடைக்கும். இதன் மூலம் பணியிடத்தில் நல்ல சூழலை உருவாக்க நீங்கள் அனைவருடனும் நல்ல உரையாடலை நிகழ்த்துங்கள்.

உறுதியாக இருங்கள்

உங்களின் உறுதியான உரையாடல், உங்களின் எண்ணங்களை தெளிவாக காட்டும். அது உங்களை மரியாதையுடன் நடத்தும். இது உங்களை நீங்கள் தெளிவுபடுத்தவும், உங்களின் எல்லைகளை வகுத்துக்கொள்ளவும் உதவும். இது நீங்கள் கடினமாக நடந்துகொள்வதை தவிர்க்க உதவும்.

உண்மையாக இருங்கள்

உண்மையல்லாத எதிர்பார்ப்புகள், விரக்தியை ஏற்படுத்தும், எனவே சாதிக்கக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து, குறிப்பிட்ட நேரத்தில் பணி செய்து, மற்றவர்களுக்கும் உதவி, சூழலையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற முயற்சி செய்யுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்