Relationship : குழந்தை பிறந்த பின் தம்பதிகளுக்குள் ஊடலா? தவிர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!
Relationship : குழந்தை பிறந்த பின் தம்பதிகளுக்குள் ஊடலா? அதை தவிர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
குழந்தை பெற்ற பின் தம்பதிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான வழிகாட்டி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவுரை
உங்கள் வாழ்வில் ஒரு குழந்தையை வரவேற்பது என்பது உங்களுக்கு மகிழ்வை தரக்கூடிய அனுபவம் மற்றும் மாற்றத்தை நிகழ்த்தும் ஒன்றும் ஆகும். அது உங்கள் வாழ்வில் முக்கியமான மாற்றத்தைக்கொண்டு வரும். குறிப்பாக உறவில் மாற்றத்தைக் கொண்டுவரும். எனவே உங்கள் குழந்தை மற்றும் உங்கள் பார்ட்னருடன் ஆரோக்கியமான, முழுமையான உறவை பராமரிப்பது.
மிகவும் அவசியம். உங்கள் பார்ட்னருடனும் நல்லுறவை பேண அவர்களுடனான உரையாடல் சிறப்பாக இருக்கவேண்டும். குழந்தை பெற்றபின் தம்பதிகளுக்கு அவர்களின் உறவை மேலும் வலுவாக்கிக்கொள்ள, அவர்களின் பிணைப்பை அதிகரித்துக்கொள்ள உதவும் குறிப்புக்களை தெரிந்துகொள்ளுங்கள்.
உரையாடலுக்கு முக்கியத்துவம்
திறந்த மற்றும் நேர்மையான உரையாடல் எந்த உறவிலும் மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தை பிறந்த பின் அந்த உரையாடல் வலுவாகவேண்டும். எனவே உங்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அக்கறைகள் குறித்து உங்கள் பார்ட்னருடன் தினமும் பேசுங்கள். உங்களுக்குள் ஏற்படும் புரிதலின்மையைப் போக்க, உங்கள் இருவருக்கும் இடையில் நல்ல உரையாடல் நடக்கவேண்டும் என்பது அவசியம். அதுதான் உங்களுக்கு ஆதரவான சூழலை வளர்த்தெடுக்கும்.
அதுதான் மனஅழுத்தம் மற்றும் மனக்கசப்பைப்போக்கும். நீங்கள் இருவரும் சேர்ந்து உங்கள் குழந்தைகளுக்கு அன்பு மற்றும் அக்கறையை வழங்கவேண்டும். அதற்கு இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கவேண்டும். பொறுப்புகளும், அக்கறையும் பகிரப்பட்டிருக்கவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.
நெருக்கத்தை பராமரியுங்கள்
ஒரு குழந்தை வந்துவிட்டால், உங்கள் இருவரின் தனிப்பட்ட நெருக்கம் குறைவது இயல்புதான். எனவே ஒவ்வொருவருக்கும் தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். உடல் ரீதியான நெருக்கம், டேட்டிங் இரவுகள், இருவரும் சேர்ந்து தரமான நேரத்தை செலவிடுவது என இருந்தால் உங்களின் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் உணர்வுகள் மற்றும் உடல் ரீதியான தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால், உங்களின் உறவு வலுப்பெறும்.
ஒருவருக்கொருவர் ஆதரவு
பெற்றோராக இருப்பது என்பது மிகவும் பொறுப்பான விஷயம். எனவே உங்கள் பார்ட்னருக்கு உணர்வு ரீதியான ஆதரவு தருவது மிகவும் அவசியம். ஒவ்வொருவரின் முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். ஒருவரையொருவர் பாராட்ட வேண்டும். தேவைப்படும்போது, உதவி கோரும்போதும் துணையிருங்கள். பெற்றோரிய பயணத்தில் உள்ள சவால்களை நீங்கள் சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் துணையிருப்பது மிகவும் அவசியம்.
எதிர்பார்ப்புக்கள்
உங்களின எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள். இந்த புதிய மாற்றத்தை ஏற்பது உங்கள் இருவருக்குமே சவாலான ஒன்று என்கதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே இருவரும் பொறுமையாக இருக்கவேண்டும். இருவருக்மே சவால்கள் ஒன்றுதான். ஒவ்வொருவரும் பெற்றோராக என்ன செய்யவேண்டும் என்று, அதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை புரிந்துகொள்ளவேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவேண்டும்.
எல்லைகள்
எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உறவை பாதுகாக்கவும், தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் மீது நீங்கள் அக்கறை காட்ட வேண்டியது மிகவும் அவசியம். எனவே உங்களுக்காகவும், தம்பதிகள் இருவருக்காகவும் நேரத்தை ஒதுக்குவது அவசியம். உங்கள் இது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள தொடர்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்க உதவும்.
தேவைப்படும்போது உதவி
நீங்கள் புதிய பெற்றோராக இருவருமே பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறீர்கள். இதனால், உங்களுக்கு தேவைப்படும்போது ஃப்ரொபஷல்களின் உதவியை கோர மறக்காதீர்கள். உங்களுக்கு பிரச்னைகள் ஏற்படும்போது கட்டாயம் உதவியை நாடுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால், தெரபி அல்லது கவுன்சிலிங் உங்களுக்கு மதிப்பான அறிவுரைகளைத்தரும். அது உங்களுக்கு உங்களின உறவை மேம்படுத்தவும், பிணைப்பை அதிகரிக்கவும் உதவும். உங்கள் உறவுச்சவால்களையும் சரிசெய்யும்.
மைல்கற்களை ஒன்றாகக் கொண்டாடுங்கள்
உங்களின் சிறிய மற்றும் பெரிய மைல்கற்களையும் ஒன்றாக கொண்டாட நேரம் ஒதுக்குங்கள். பெற்றோராக நீங்கள் கற்கும் ஒவ்வொன்றும் பெரிய படிப்பினைதான். எனவே அந்த சாதனைகளை கொண்டாடுங்கள். நீங்கள் குழந்தைகளுடன் மகிழ்ந்திருக்கும் தருணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். இது உங்களின் பார்ட்னர்ஷிப் உங்களுக்கு குழந்தைகளை நன்றாக வளர்க்க உதவும். நிறைய மறக்கமுடியாத நினைவுகளையும் தரும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்