தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Reduce Trans Fat Intake For The Sake Of Your Heart Health

Heart Health: இதய ஆரோக்கியத்துக்கு வில்லனாக இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு உணவுகள்! தவிர்ப்பது எப்படி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 18, 2024 09:55 AM IST

டிரான்ஸ் கொழுப்புகள் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகள் உருவாக்குகிறது. இருதயம் தொடர்பான நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது. டிரான்ஸ் கொழுப்பு உணவுகளை இந்த வழிகள் பின்பற்றலாம்

டிரான்ஸ் கொழுப்பு உணவுகள்
டிரான்ஸ் கொழுப்பு உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த டிரான்ஸ் கொழுப்புகள் பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இருதயம் தொடர்பான நோய் ஆபத்தை கொண்டதாக இருந்து வரும் இவை, கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் அழற்சி ஏற்படுகின்றன.

டிரான்ஸ் கொழுப்பு உணவுகள் எடுத்துக்கொள்வதை தவரிக்க சில வழிகளை பின்பற்ற வேண்டும். அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான எண்ணெய் பயன்படுத்துதல்

அதிக அளவில் நிறைவுறா கொழுப்புகள் அளவை கொண்ட எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். ஆலிவ் எண்ணெய், கனோலா அல்லது சூரியகாந்தி (சன்பிளவர்) எண்ணெய்களை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களில் அதிகளவில் மோனோ, பாலி நிறைவுறா கொழுப்புகள் இடம்பிடித்துள்ளன. இவர் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களை தருவதோடு அழிற்சிகள் ஏற்படுவதை குறைக்கிறது. மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து செல்களை பாதுகாக்கிறது. பசி உணர்வை குறைத்து, இந்த எண்ணெய்கள் எடை நிர்வாகத்துக்கும் உதவுகிறது.

சாப்பிடும் உணவு லேபிள்களை தவறாமல் படித்தல்

டிரான்ஸ் கொழுப்பு அளிவு மொத்த கொழுப்பு பரிவில் குறிக்கப்பட்டிருக்கும். இதன் நாம் சாப்பிடும் உணவு லேபிள்களில் பார்க்கலாம். பகுதி ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் (partially hydrogenated oils) என்று அச்சிடப்பட்டிருக்கிறாதா என்பதை பார்க்க வேண்டும். இதன் மூலம் டிரான்ஸ் கொழுப்புகள் இருப்பதை அடையாளம் காணலாம். குறைவான அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நலம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை குறைத்தல்

பதப்படுத்தப்பட்ட, பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை வெகுவாக குறைக்க வேண்டும். இவற்றில் மறைமுகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இடம்பிடித்துள்ளன. உறைந்த உணவுகள், முன்கூட்டியே தொகுக்கப்பட்ட தின்பண்டங்கள் போன்றவற்றைில் இவை நிறைந்திருக்கும். எனவே பதப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம். ஏனென்றால் இதில் அதிகளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதோடு, குறைவான டிரான்ஸ் கொழுப்புகள் இடம்பிடித்திருக்கும்.

வீட்டில் சமைத்தல்

ப்ரஷ்ஷான சேர்மானங்களை வைத்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதன் மூலம் கொழுப்பு எடுத்துக்கொள்வதை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். மறைமுகமாக உணவில் சேரும் டிரான்ஸ் கொழுப்புகளும் கட்டுக்குள் இருக்கும். முடிந்த அளவு இயற்கையாகவே உடலில் கொழுப்புக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இயற்கையாக கொழுப்புகளை பெறுதல்

கொட்டை வகைகள், அவகோடா போன்ற பழங்கள் இயற்கையாகவே கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது. இவற்றால் ஆன எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. அத்துடன் சமநிலையான டயட்டாகவும் அமைகிறது. இந்த எண்ணெய்களில் இடம்பிடித்திருக்கும் அடிப்படை கொழுப்பு அமிலங்கள், செல்களின் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

டிரான்ஸ் கொழுப்பு இல்லாத மாற்றுகளைத் தேர்வு செய்தல்

கொழுப்புகள் இல்லாத ஸ்நாக்ஸ், பேக்கிங் உணவுகளை சாப்பிட வேண்டும். பாப்கார்ன், ப்ரஷ் பழங்கள், கொழுப்பு இல்லாத யோகார்ட், கொழுப்பு குறைவான கேக், மப்பின்ஸ், குக்கிகள் சிறந்த மாற்றாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்