சிவப்பு சட்னி : கேரளா ஸ்டைல் தேங்காய் சிவப்பு சட்னி; பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும்; சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றும்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிவப்பு சட்னி : கேரளா ஸ்டைல் தேங்காய் சிவப்பு சட்னி; பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும்; சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றும்

சிவப்பு சட்னி : கேரளா ஸ்டைல் தேங்காய் சிவப்பு சட்னி; பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும்; சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றும்

Priyadarshini R HT Tamil
Published Mar 24, 2025 12:03 PM IST

சிவப்பு சட்னி : கேரளா ஸ்டைல் சிவப்பு சட்னியை நீங்கள் ருசித்து சாப்பிடலாம். சூப்பர் சுவையைக் கொண்டது இந்த சட்னி. நீங்கள் விரும்பி சாப்பிடுவீர்கள். இதைச் செய்வதும் எளிது.

சிவப்பு சட்னி : கேரளா ஸ்டைல் தேங்காய் சிவப்பு சட்னி; பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும்; சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றும்
சிவப்பு சட்னி : கேரளா ஸ்டைல் தேங்காய் சிவப்பு சட்னி; பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும்; சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றும்

தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

• சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

• பூண்டு – 8 பல்

• தேங்காய்த் துருவல் – அரை கப்

• இஞ்சி – அரை இன்ச்

• உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• வர மிளகாய் – 2

செய்முறை

1. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

2. அடுத்து வரமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். மூன்றையும் வறுத்துவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவேண்டும்.

3. ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய், இஞ்சி, உப்பு, வதக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். நல்ல துவையல் பதத்துக்கு அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

4. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு சேர்த்து பொரிந்தவுடன், உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். அது பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும்.

5. அடுத்து கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை சிறிது நேரம் வதக்கவேண்டும். பின்னர் சட்னியில் சேர்த்து கலந்துவிட்டால் சூப்பர் சுவையான கேரளா ஸ்டைல் சிவப்பு சட்னி தயார்.

6. இதை சூடான இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்து சாப்பிட்டு மகிழுங்கள்.