தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Acidity Remedies: அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல் ஏற்பட காரணங்களும், தடுக்க எளிய வழிமுறைகளும் இதோ

Acidity Remedies: அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல் ஏற்பட காரணங்களும், தடுக்க எளிய வழிமுறைகளும் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 10, 2024 05:51 PM IST

அதிக அளவில் காபி அல்லது டீ குடிப்பது, சாப்பிட்ட உடன் உடனடியாக படுக்கைக்கு செல்வது, நாள்தோறும் சாப்பிடும் உணவில் அதிகளவில் காரணம் சேர்ப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கம் காரணமாக அமிலத்தன்மை பிரச்னை ஏற்படுகிறது.

நெஞ்சு எரிச்சலில் இருந்து விடுபட எளிய வழிகள்
நெஞ்சு எரிச்சலில் இருந்து விடுபட எளிய வழிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

வயிறு உப்புசம் ஆவதற்கு அதிகமாக கபைன் பானங்கள் பருகுவதும் பிரதான காரணமாக உள்ளது. மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை பின்பற்ற, குறைவான அளவில் சாப்பாடு சாப்பிடுவதன் மூலம் மிகப் பெரிய பலனை அடையலாம். இதுதவிர சில வீட்டு வைத்திய முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மேற்கூறிய அமிலத்தன்மை, வயிறு உப்புசம் பிரச்னைகளை தவிர்க்கலாம்

உடலில் அமிலத்தன்மை உண்டாவதை தவிர்க்கவும், அதனால் உண்டாகும் அசெளகரியத்தை போக்கவும், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, சமநிலையான உணவு உட்கொள்ளுதல் மற்றும் மனஅழுத்தம் இல்லாமல் இருத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அமிலத்தன்மை பிரச்னை இருப்பவர்கள் சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக குறைவாக சாப்பிடலாம். அத்துடன் மதிய உணவோ அல்லது இரவு உணவோ சாப்பிட்டவுடன் இரண்டு மணி நேரம் கழித்துதான் தூங்குவதற்கு செல்ல வேண்டும்.

உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும். உடலுக்கு தேவையான அளவு ஓய்வு, அதிகளவில் தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம், யோகா பயிற்சி மேற்கொள்வது, மூச்சுப்பயிற்சி செய்வது, தியானம், உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அமிலத்தன்மை பிரச்னை தீர்க்கப்படும்.

அதிகளவில் காரம், புளிப்பு, உப்பு, புளித்த, பொறித்த, பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்கவும். ஏனென்றால் இவை செரிமானம் ஆவதற்கு சிரமப்படுவதுடன், நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும்.

அதிகளவில் உணவு சாப்பிடக்கூடாது. குறிப்பாக புளிப்பு நிறைந்த பழங்கள் அதிகம் சாப்பிடக்கூடாது. பெரிய அளவில் உணவு சாப்பிடுவதற்கு பதிலாக மினி சாப்பாடு சாப்பிடுவதன் மூலம் உங்கள் செரிமான அமைப்பு சீராக செயல்பாட உதவுகிறது.

புளிப்பு நிறைந்த ஆரஞ்சு, பெர்ரி பழங்கள் வெறும் வயிற்றில் உட்கொண்டால் நெஞ்எரிச்சலை உண்டாக்கும்.

அமிலத்தன்மை மற்றும் நெஞ்சு எரிச்சலை போக்க வீட்டிலேயே  பின்பற்றி வேண்டிய எளிய மருத்து முறைகளை இதோ

பெருஞ்சீரகம் கலந்த நீர்: 

ஒரு டிஸ்பூன் அளவு பெருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து அந்த ப்ளேவருக்கு மாறிய தண்ணீரை பருக வேண்டும். இது அமிலத்தன்மை அல்லது நெஞ்சு எரிச்சலுக்கு சிறந்த அருமருந்தாகும்

வெல்லம்: 

வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிரம்பியுள்ளன. உடலிலுள்ள PH சமநிலையை பராமரிக்க பொட்டாசியம் உதவுகிறது. அதேபோல் உங்கள் செரிமான அமைப்பு சீராக செயல்பட மக்னீசியம் சத்துகள் அத்தியாவசியமாக உள்ளது. எனவே ஒரு சிறிய துண்டு வெல்லம் உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய நன்மைகளை பெறுவதற்கு வழி வகுக்கிறது

கருஞ்சீரகம்: 

உடலில் அமிலத்தன்மை அல்லது நெஞ்சு எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் கருஞ்சீரகத்தை சிறிது அளவு அப்படியே மென்று சாப்பிடலாம். இதனை ஒரு டிஸ்பூன் எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகியும் அமிலத்தன்மையை விரட்டி அடிக்கலாம்

ஓமம்: 

அமிலத்தன்மை மற்றும் வாய்வு தொல்லைக்கு சிறந்த வீட்டு மருந்தாக ஓமம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இது செரிமானத்தை சீராக்குகிறது, சிறந்த ஆன்டி-ஆசிட் எதிர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்