Realme: நாளை அறிமுகமாகும் ரியல்மி 13 ப்ரோ, ரியல்மி 13 ப்ரோ ப்ளஸ்: ரூ.3ஆயிரம் வரை ஆரம்பவிலை சலுகை; அதிரடி நுட்பங்கள்
Realme: நாளை அறிமுகமாகும் ரியல்மி 13 ப்ரோ, ரியல்மி 13 ப்ரோ ப்ளஸ்; ரூ.3ஆயிரம் வரை ஆரம்பவிலை சலுகையை அறிவித்த ரியல்மி நிறுவனம் மற்றும் அதன் அதிரடி நுட்பங்கள் குறித்துப் பார்ப்போம்.

Realme: நாளை அறிமுகமாகும் ரியல்மி 13 ப்ரோ, ரியல்மி 13 ப்ரோ ப்ளஸ்: ரூ.3ஆயிரம் வரை ஆரம்பவிலை சலுகை; அதிரடி நுட்பங்கள்
Realme: ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரான ரியல்மி 13 ப்ரோ சீரிஸை ஜூலை 30ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
நாளை அறிமுகமாகும் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ்:
ரியல்மி 13 ப்ரோ அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த நிறுவனம் இந்த வகை ஸ்மார்ட்போன் தொடரின் ஆரம்ப விற்பனை விலையை அறிவித்துள்ளது. ரியல்மி 13 ப்ரோ புதிய சாதனத்தின் ஆரம்ப விற்பனை விலை நாளை ஜூலை 30, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் இந்த ஆரம்பவிலை பட்டியல் இருக்கும்.
இதில் சிறப்பு விஷயம் என்னவென்றால், ரியல் மி நிறுவனம் புதிய சீரிஸ் போன்களில், ரியல்மி 13 ப்ரோவின் ஆரம்ப விலையில், வங்கி சலுகைகளில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்போகிறது. இது தவிர, நீங்கள் இந்த தொலைபேசிகளை 12 மாத, நோ காஸ்ட் இஎம்ஐ-யில் வாங்க முடியும்.