Raw Turmeric Paste : பெண்கள் குளியலுக்கு பயன்படுத்தும் ஒன்று! அதை சாப்பிடுவதால் உடலுக்கு எத்தனை நல்லது பாருங்க!
Raw Turmeric Paste : பெண்கள் குளியலுக்கு பயன்படுத்தும் ஒன்று! அதை சாப்பிடுவதால் உடலுக்கு எத்தனை நல்லது பாருங்க!

சிறுநீரக பிரச்னை முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக பசு மஞ்சள் உள்ளது. அதில் உள்ள நோய் எதிர்ப்பு திறன்களுக்காகத்தான் பெண்கள் அதை குளிக்கப்பயன்படுத்துகிறார்கள்.
சித்த மருத்துவத்தில் மஞ்சள் பல நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் நாம் அதை சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். நாம் மஞ்சளை காய வைத்து பொடி செய்து சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.
ஆனால், மஞ்சளை பச்சையாக சாப்பிடும்போது அது உடலில் நிறைய ஆரோக்கிய மாற்றங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்துகிறது என ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சையாக இருக்கும் மஞ்சள் கிழங்கை வைத்து பசு மஞ்சளில் விழுது தயாரிப்பது எப்படி? அதை சாப்பிடுவது எப்படி? பயன்கள் என்ன கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் மஞ்சள் பொடியை செய்வதற்கு மஞ்சள் கிழங்கை வேகவைத்து, வெயிலில் நன்றாக காய வைத்து, உலர்த்தி பின்னர் அரைத்து பொடியாகப் பயன்படுத்துவோம்.
ஆனால் இந்த பசு மஞ்சள் காயவைப்பதற்கு முன் ஈரப்பதத்துடன் இருக்கும். எப்போதும் நாம் மஞ்சளை தனியாக பயன்படுத்தக்கூடாது. அதை மற்ற பொருட்களுடன் சேர்த்துதான் பயன்படுத்த வேண்டும். இந்த பஜ மஞ்சள் விழுதை நாம் வீடுகளில் அரைத்து வைத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருள்கள்
பச்சை மஞ்சள் – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 10
மிளகு – 2 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
துளசி – 20 இலைகள்
செய்முறை
மஞ்சளின் மேல் தோலை சீவிவிட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் தோல் உரித்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
துளசியையும் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சள், மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு, துளசி ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். 15 நாட்கள் வரை இதை பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை ஃபிரஷ்ஷாக செய்துகொள்வது இன்னும் சிறந்தது.
கர்ப்பம் தரிக்க முயற்சிக்கிறவர்கள் துளசியை மட்டும் தவிர்த்து விடுங்கள்.
தினமும் ஒரு வேளை உணவு எடுத்துக்கொண்ட பத்து நிமிடங்கள் கழித்து இந்த பசுமஞ்சள் சாப்பிட வேண்டும்.
காலை அல்லது இரவு நேரத்தில் எடுத்துக்கொள்வது மிகச்சிறந்தது.
அசைவ உணவுகள் அதிகமாக சாப்பிடுகிறவர்கள் அசைவம் சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து எடுப்பது நல்லது.
அரை ஸ்பூன் அளவு பேஸ்ட்டை எடுத்து உருண்டையாக உருட்டி, சாப்பிட்டு விட்டு, தண்ணீர் குடிக்கலாம் அல்லது அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
5 வயதுக்கு மேல் 80 வயது வரை உள்ளவர்கள் எல்லோரும் இந்த பசுமஞ்சளை எடுத்துக் கொள்ளலாம்.
இதில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. புற்றுநோய் செல்களை தடுக்கிறது. கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கிறது.
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதால், இது அடிக்கடி சளி, இருமல் ஏற்படாமல் தடுக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்