Raw Turmeric Masala : பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கொத்தை வீணாக்கவேண்டாம்; இதோ சத்துமிக்க சைட்டிஷ் ரெடி!
பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கொத்தை வீணாக்காமல் இப்படி ஒரு டிஷ் செஞ்சுடுங்க.

தேவையான பொருட்கள்
பசு மஞ்சள் – 4 (தோல் நீக்கி துருவிக்கொள்ளவேண்டும்)
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
பச்சை பட்டாணி – ஒரு கப்
முந்திரி – ஒரு கைப்பிடியளவு
பிரியாணி இலை – 1
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
ஸ்டார் சோம்பு – 1
சீரகம் – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
தயிர் – ஒரு கப்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கசூரி மேத்தி – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
ஒரு கப்பில் தயிர் மிளகாய்த் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து பசு மஞ்சளை வதக்கிக்கொள்ளவேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும். அடுத்து மேலும் சிறிது நெய் சேர்த்து பச்சை பட்டாணி மற்றும் முந்திரிசேர்த்து நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
பின்னர் பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கியபின், தக்காளி சேர்த்து நல்ல குலைவாக மசியும் வரை வதக்கவேண்டும்.
அடுத்து அடித்து வைத்துள்ள தயிர், வதக்கி வைத்துள்ள துருவிய மஞ்சள், முந்திரி மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும். அனைத்தும் வெந்து திரண்டு எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் கசூரி மேத்தி தூவி பரிமாறினால் சுவை அள்ளும். இதை நீங்கள் சப்பாத்தி, பூரி, ரொட்டி, ஃபுல்கா என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாற சுவை அள்ளும். தோசைக்கும், ஆப்பம், இடியாப்பம், ஊத்தப்பம் ஆகியவற்றுக்கும் ஏற்றது.
ஒருமுறை ருசித்தால் மீண்டும் ருசிக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். வேண்டாம் என்று தூக்கி வீசக்கூடிய மஞ்சள் கொத்து மஞ்சளும் வீணாகாது. குழந்தைகள் சப்பாத்திக்கு வித்யாசமான சப்ஜி என்று விரும்பி சாப்பிடுவார்கள்.
குர்குமின் – மஞ்சளில் உள்ள முக்கிய உட்பொருள்
பசு மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் அத்தனைக்கும், அதில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள்தான காரணமாகிறது. குர்குமின் என்பது ஒரு பாலிஃபினால், அது ஒரு வகை பைஃட்டோகெமிக்கல், இது தாவரங்களில் காணப்படும். இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சிக்கு எதிரான குணங்கள் நாள்பட்ட வீக்கம் மற்றும் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஆகியவற்றைப் போக்குகிறது.
வீக்கத்துக்கு எதிரான சக்திவாய்ந்த குணம் கொண்டது.
உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட் நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது.
மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது
இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது
புற்றுநோயை தடுக்கிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது.
இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது.
சரும ஆரோக்கியம் மற்றும் சருமம் பொலிவுபெற உதவுகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்