தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ravva Utappam A Tantalizingly Colorful Ravva Utappam Delicious Too

Ravva Utappam: சுண்டி இழுக்கும் கலர்புல் ரவை ஊத்தாப்பம்.. ருசியானதும் கூட

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 02, 2024 11:30 AM IST

கலர் புல்லாக இருப்பதால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு காய்கறிகளுடன் சேர்த்து சத்தான டிபன் கொடுக்க இந்த ஊத்தாப்பம் ஒரு மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

ரவா ஊத்தாப்பம்
ரவா ஊத்தாப்பம் (sᴀᴍʀɪᴅᴅʜɪ /twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

அது மட்டும் இல்லை. இட்லிக்கு மாவு இல்லாத நேரத்தில் மிகவும் எளிதாக இந்த ஊத்தாப்பத்தை செய்யலாம். ரவா ஊத்தாப்பில் தயிர் மற்றும் சில காய்கறிகளும் சேர்க்கப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கான சிறந்த காலை உணவுவாகவும் இது பார்க்கப்படுகிறது. இப்போது அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ரவா ஊத்தாப்பம் செய்முறைக்கு தேவையான பொருட்கள்

உப்புமா ரவா - ஒரு கப்

தயிர் - இரண்டு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

உப்பு - சுவைக்க

கறிவேப்பிலை - ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

கேரட் துருவல் - கால் கப்

துருவிய குடமிளகாய் - கால் கப்

தக்காளி - கால் கப்

வெங்காயம் - கால் கப்

உப்பு - சுவைக்க ஏற்ப

தண்ணீர் - போதுமானது

ரவா ஊத்தப்பம் செய்முறை

1. உப்மா ரவாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ள வேண்டும். அதனுடன் தயிர் சேர்க்க வேண்டும்.பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

2. இந்த ரவை ஊத்தாப்பத்திற்கு மாவு சற்று கெட்டியாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். பத்து நிமிடங்கள் மாவும் தயிரும் நன்றாக ஊறும் வரை காத்திருக்க வேண்டும்.

3. பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். இதை நன்றாக கலக்கி விட வேண்டும்.

4. இதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

5. இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து, இந்த மாவில் கலக்கவும்.

6. இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். அதில் சிறிது எண்ணெய் சேர்க்க வேண்டும்..

7. அதில் ஏற்கனவே கலந்து வைத்துள்ள மாவை ஊத்தாப்பம் போல் ஊற்ற வேண்டும்.

8. இருபுறமும் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

9. இந்த ஊத்தாப்பத்துடன் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட அதன் ருசி அருமையாக இருக்கும்.

இந்த ரவா ஊத்தாப்பத்தில் தக்காளி, கேப்சிகம், வெங்காயம் மற்றும் கேரட் சேர்க்கப்படுகிறது. இதனால் இந்த ஊத்தாப்பம் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே உங்கள் குழந்தைகள் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தால் உடனே இது போன்ற சத்தான உத்தாப்பத்தை தரலாம். 

கலர் புல்லாக இருப்பதால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு காய்கறிகளுடன் சேர்த்து சத்தான டிபன் கொடுக்க இந்த ஊத்தாப்பம் ஒரு மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

குறிப்பு:  விருப்பம் உள்ளவர்கள் மாவில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து ஊற்றி இந்த ஊத்தாப்பத்தை முயற்சிக்கலாம். அதுவும் நன்றாகவே இருக்கும்

 

WhatsApp channel