தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Rasagulla : Run Children! Gundu Gundu Yummy Yummy Colorful Rasagulla!

Rasagulla : குழந்தைகளே ஓடிவாங்க! குண்டு குண்டு யம்மி யம்மி கலர்கலரான ரசகுல்லா!

Priyadarshini R HT Tamil
Feb 10, 2024 08:30 AM IST

Rasagulla : குழந்தைகளே ஓடிவாங்க! குண்டு குண்டு யம்மி யம்மி கலர்கலரான ரசகுல்லா!

Rasagulla : குழந்தைகளே ஓடிவாங்க! குண்டு குண்டு யம்மி யம்மி கலர்கலரான ரசகுல்லா!
Rasagulla : குழந்தைகளே ஓடிவாங்க! குண்டு குண்டு யம்மி யம்மி கலர்கலரான ரசகுல்லா!

ட்ரெண்டிங் செய்திகள்

தண்ணீர் – ஒரு கிண்ணம்

வினிகர் – 3 டேபிள் ஸ்பூன்

பிங்க் ஜெல் – சில துளிகள்

மஞ்சள் ஜெல் – சில துளிகள்

பச்சை ஜெல் – சில துளிகள்

சர்க்கரை சிரப் செய்ய தேவையான பொருட்கள்

சர்க்கரை – ஒன்னே முக்கால் கப்

தண்ணீர் – 4 கப்

ஏலக்காய் – 2

குங்குமப்பூ – 2 சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து சூடாக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு கிண்ணம் தண்ணீரில் வினிகரை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

பால் கொதிக்க ஆரம்பித்ததும் படிப்படியாக வினிகர் சேர்த்த தண்ணீரை ஊற்றி பாலை திரிக்கவேண்டும்.

பாலை வடிகட்டி, தண்ணீரில் கழுவி அதிகப்படியான தண்ணீரை ஒரு துணியின் உதவியுடன் பிழிந்து எடுக்கவேண்டும்.

சேனாவை ஒரு மணி நேரம் துணியில் கட்டி தொங்கவிடவேண்டும். அப்போது தான் அதில் உள்ள தண்ணீர் முற்றிலும் வடிக்கப்படும்.

ஒரு மணி நேரம் கழித்து, சேனாவை எடுத்து 30 நிமிடங்கள் மிருதுவாக பிசைய வேண்டும். அது மென்மையாகவும் நன்றாகவும் இருக்கும்.

பிசைந்த மாவை நான்கு பகுதிகளாகப் பிரித்து, தேவையான ஜெல் நிறங்களைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அனைத்து கலர் மாவிலிருந்து உருண்டைகளை தயார் செய்து தனித்னியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை பாகுக்கு, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை எடுத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை மூழ்குமளவுக்கு தண்ணீர் வைத்து, சர்க்கரையை முழுவதுமாக கரையவிடவேண்டும்.

பிறகு ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவேண்டும். நன்றாக கலந்து கொதிக்க வைக்கவேண்டும்.

மெதுவாக சேனா உருண்டைகளைச் சேர்க்கவும்.

பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, உருண்டைகளை சர்க்கரை பாகில்ல் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

மூடியைத் திறந்து, சேனா உருண்டைகளை மெதுவாக மறுபுறம் புரட்டி, மீண்டும் பாத்திரத்தை மூடி மேலும் 10 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

10 நிமிடங்களுக்குப் பின்னர், அடுப்பை அணைத்து, ரசகுல்லாவை ஆற விடவேண்டும்.

அவ்வளவுதான், ரஸ்குல்லாக்கள் பரிமாற தயாராக உள்ளது.

ரசகுல்லா, வங்காளத்தை சேர்ந்த ஒரு இனிப்பு. வங்காளம் அனைத்து வகை இனிப்புகளுக்கும் புகழ்பெற்றது. இந்த ரசகுல்லா, கொழுப்பு நிறைந்த பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கான சேனா தயாரிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். வினிகர் மட்டுமல்ல எலுமிச்சையும் சேர்த்து அதை தயாரிக்கலாம்.

எலுமிச்சை சேர்க்கும்போது துணியில் வடிகட்டும்போது சிறிது தண்ணீரில் அலசி வடிகட்ட வேண்டும். அப்போதுதான் எலுமிச்சையின் சுவை அதில் இல்லாமல் இருக்கும். மைதா அல்லது சேளா மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து செய்தால், அந்த ஓரங்கள் உடையாமல் வரும். 

கலர்கலராக வேண்டுமானால் கலர் சேர்த்து செய்யலாம் அல்லது வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். கலர் சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் சுவை அப்படியே இருக்கும்.

பால் பொங்கியவுடன், அடுப்பை அணைத்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வினிகர் கலந்த தண்ணீர் சேர்க்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து அதையும், இதில் சேர்க்க வேண்டும். சேனாவை பிசையும்போது, மாவு பதத்தில் கீரிமியாக இருக்க வேண்டும்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன்.

WhatsApp channel

டாபிக்ஸ்