தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Rasa Podi Spread This Fragrant Powder Enjoy Instant Juice And Peace Of Mind

Rasa Podi மணமணக்கும் இந்த பொடிய அரைச்சு வெச்சுடுங்க; நிமிஷத்துல ரசம் வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

Priyadarshini R HT Tamil
Jan 24, 2024 10:36 AM IST

Rasa Podi மணமணக்கும் இந்த பொடிய அரைச்சு வெச்சுடுங்க; நிமிஷத்துல ரசம் வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

Rasa Podi மணமணக்கும் இந்த பொடிய அரைச்சு வெச்சுடுங்க; நிமிஷத்துல ரசம் வெச்சுட்டு நிம்மதியா இருங்க!
Rasa Podi மணமணக்கும் இந்த பொடிய அரைச்சு வெச்சுடுங்க; நிமிஷத்துல ரசம் வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

வர மல்லி விதை – அரை கப்

சீரகம் – அரை கப்

மிளகு – அரை கப்

கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் – 10

பெருங்காயம் – ஒரு பெரிய கட்டி

புளி – 100 கிராம்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

பருப்பு, வர மல்லி, சீரகம், மிளகு, கல் உப்பு, மிளகாய், பெருங்காயம், புளி என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாகும் வரை அல்லது மணம் வரும் வரை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அனைத்தையும் ஆறவைத்து மஞ்சள் தூள் சேர்த்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

புளி அவ்வளவு எளிதில் பொடியாகாது. எனவே சலித்து, சலித்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக கடுகு மற்றும் கறிவேப்பிலையை வறுத்து, சேர்க்க வேண்டும். கறிவேப்பிலையை கைகளால் பொடித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு கண்ணாடி பாட்லில் காற்று புகாமல் அடைத்து வைத்துக்கொண்டு ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

பெருங்காயம் கட்டியாக இருந்தால் பொடித்து விட்டு, அதை வறுத்துக்கொள்ள வேண்டும் அல்லது தூள் பெருங்காயம் என்றால் அதை நேரடியாகவே வறுத்து எடுத்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற பொடிகள் செய்யும்போது எப்போதும் கல் உப்பு பயன்படுத்துவது சிறந்தது. அதையும் வறுத்துவிடவேண்டும். எதிலும் ஈரம் இல்லாமல் இருந்தால்தான் பொடி நீண்ட நாட்கள் கெடாது.

இதை பயன்படுத்தி ரசம் வைக்கும்போது, தண்ணீர் அல்லது அரிசி கழுவிய நீரில் இரண்டு ஸ்பூன் இதை சேர்த்துவிடவேண்டும். தக்காளியை கைகளால் பிசைந்து அந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு மறறும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் மல்லித்தழை, கறிவேப்பிலை மற்றும் பச்சைமிளகாயை இடித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் நன்றாக தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, இதில் 5 பல் பூண்டு தட்டி சேர்க்கவேண்டும். இந்த கலவையை அப்படியே சேர்க்க வேண்டும். ரசத்தை எப்போது கொதிக்க விடக்கூடாது, நுரை திரண்டு வரும்போதே இறக்கிவிடவேண்டும்.

பின்னர் துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் கொஞ்சம் சேர்க்க ரசத்தின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். துருவிய தேங்காயை சிறிது எடுத்து இதில் பிழிந்து சேர்க்க ரசத்தின் சுவை இன்னும் அதிகரிககும்.

இவையெல்லாம் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

பொடி தயாரிக்கும்போது மிளகாய் சேர்த்திருப்பதால், மிளகாய் கூடுதலாக சேர்ப்பதில் கவனமான இருக்க வேண்டும்.

பொடியுடனே புளியும் இருப்பதால், நீங்கள் புளியை தனியாக ஊறவைக்க தேவையில்லை. உங்களுக்கு தேவைப்பட்டால் புளி ஊறவைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். அப்பளம், ஊறுகாய் அல்லது உருளைக்கிழங்கு வறுவலே போதுமானது.

இது அவசரமான நாட்களுக்கு மிகவும் உதவிகரமான பொடியாகும். நிமடத்தில் சாதம் வெந்து முடிப்பதற்குள் ரசம், அப்பளம் தயார் செய்துவிட்டு, ஒரு நாளையே முடித்துவிடலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்