Rainy Season Tips : பற்றிப்பரவும் டெங்கு; சீசன் ஆரம்பிச்சாச்சு; சளி, இருமல், காய்ச்சலை அடித்து துரத்தும் குறிப்புகள் இவை
Rainy Season Tips : பற்றிப்பரவும் டெங்கு; சீசன் ஆரம்பிச்சாச்சு; சளி, இருமல், காய்ச்சலை அடித்து துரத்தும் குறிப்புகளை இங்கு தெரிந்துகொண்டு முன்செச்சரிக்கையுடன் மழைக்காலத்தை எதிர்கொள்ளுங்கள்.

மழைக்காலம் துவங்கிவிட்டது. சளி, இருமல், காய்ச்சல் என எங்கும் பரவத்துவங்கிவிட்டது. இடையில் டெங்கு வேறு கடுமையான பரவி மரணமும் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் குழந்தைகளை நாம் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
வாய் கொப்பளிக்கும்போது என்ன செய்யவேண்டும்?
காலையில் அவர்கள் எழுந்தவுடன் சூடான தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பல் துலக்கியவுடன் அவர்களை கொப்பளிக்க அறிவுறுத்தவேண்டும்.
குறிப்பாக வீட்டுக்கு வந்தவுடன் இதை பிப்ரவரி மாதம் வரை இதைச் செய்வதை வழக்கமாக்கவேண்டும். ஏனெனில் உங்களுக்கு கிருமித்தொற்றுகள் ஏதுவும் இருந்தால், அது வாயில் இருந்து அகன்றுவிடும். உள்ளுக்குள் சென்று தொல்லை தராது.
இதனால் சைனஸ் மற்றும் சளியால் ஏற்படும் தலைவலி, தலையில் நீர்க்கோர்த்தலால் ஏற்படும் தலைவலி போன்ற பிரச்னைகளை சரிசெய்யும். மேலும் தலையில் பேன், பொடுகு, அரிப்பு ஆகியவற்றையும் நீக்கும்.
பனங்கருப்பட்டி
பனங்கருப்பட்டியை வாயில் அடக்கிவைத்துக்கொண்டால் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற அனைத்தும் குணமாகும். இது கருப்பைக்கு சிறந்தது. இரும்புச்சத்து நிறைந்தது.
தூதுவளை
உடலில் உள்ள நோய்களை துரத்தும் தூதுவன் என்று அழைக்கப்படும். சளி, இருமலால் தொண்டை வரை புண்கள் ஏற்பட்டு, காது வலி என அவதிப்படும் குழந்தைகளுக்கு தூதுவளையில் சூப், ரசம், துவையல் என செய்து கொடுப்பது நல்லது. இரண்டு லிட்டர் தண்ணீரில் 6 தூதுவளை இலைகளைப் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி ஆறவைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி நாள் முழுவதுமே பருகலாம். இதனால் குழந்தைகளுக்கு சளி, இருமலால், தொண்டை மற்றும் காது பிரச்னைகள் எதுவும் ஏற்படாது.
மிளகு
இந்த சீசனில் அனைத்து உணவு வகைகளிலும் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அல்சர் வரும். எனவே துளியை மட்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாலில் இரவு கலந்து பருகினால் நல்லது.
நொச்சி இலைகளை பறித்து மண் சட்டியில் வறுத்து அதை கரியாக்கி சாம்பலாகப் பொடித்துக்கொள்ளவேண்டும். அதை ஒரு பையில் போட்டு குழந்தைகள் தலைக்கு வைத்து படுக்க உதவினால் போதும், அவர்களுக்கு தலையில் நீர்க்கோர்ப்பதால், ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. நீர்கோர்ப்பதை தடுக்கிறது.
மழைக்காலத்தில் ஏற்படும் சிறிய தொற்றுக்களை சரிசெய்ய வீட்டிலே இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது என்பது பழமொழி. இவையெல்லாம் மழைக்காலத்தில் வருமுன் காப்பதற்காக செய்யப்படும் நடடிவடிக்கைகள். மிதமான அளவில் இருக்கும்போது வரை உதவும். அதிகமானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்