தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ragi Murukku Karakara Moru Moru Ragi Murukku Healthy Evening Snacks

Ragi Muruku : கரகர மொறு மொறு ராகி முறுக்கு! ஆரோக்கியமான ஈவ்னிங் ஸ்னாக்!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2024 12:00 PM IST

Ragi Muruku : கரகர மொறு மொறு ராகி முறுக்கு! ஆரோக்கியமான ஈவ்னிங் ஸ்னாக்!

Ragi Muruku : கரகர மொறு மொறு ராகி முறுக்கு! ஆரோக்கியமான ஈவ்னிங் ஸ்னாக்!
Ragi Muruku : கரகர மொறு மொறு ராகி முறுக்கு! ஆரோக்கியமான ஈவ்னிங் ஸ்னாக்!

ட்ரெண்டிங் செய்திகள்

அரிசி மாவு – அரை கப்

கடலை மாவு – 2 ஸ்பூன்

உப்பு – ஒன்றரை ஸ்பூன்

பெருங்காய தூள் – அரை ஸ்பூன்

எள் – 2 ஸ்பூன்

உப்பில்லாத வெண்ணெய் – அரை ஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை -

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காய தூள், எள் ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.

இந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை தயார் செய்யவேண்டும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவேண்டும்.

மாவை சிறிதளவு எடுத்து முறுக்கு அச்சில் போடவேண்டும்.

எண்ணெய் தடவிய தட்டையான கரண்டியில் விரும்பிய வடிவத்தில் முறுக்குகளை பிழிந்துகொள்ள வேண்டும்.

முறுக்குகளை சூடான எண்ணெயில் மிதமான தீயில் எண்ணெய் சத்தம் நிற்கும் வரை வறுக்கவேண்டும்.

ராகி முறுக்குகளை கடாயில் இருந்து எடுக்க, எண்ணெய் வடிகட்டியில் சேர்க்கவேண்டும்.

அவ்வளவுதான் மொறுமொறுப்பான சுவையான ராகி முறுக்கு பரிமாறவும் ருசிக்கவும் தயார்.

ராகியின் நன்மைகள்

ராகி, பெண்களுக்கு மிகவும் சிறந்த உணவு. இது ஹார்மோன் சுரப்பை முறைப்படுத்த உதவுகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இதை ஆண், பெண் இருவரும் எடுத்துக்கொள்ளலாம். குழந்தையின் முதல் உணவு என்பது ராகியின் மற்றொரு சிறப்பு.

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

ராகியை இட்லி, தோசை என எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். முறுக்கு செய்தால், அது ஸ்னாக்ஸ் என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை சில நாட்கள் வைத்துக்கொள்ளலாம். இவை மொறு மொறு சுவையில் மனதை அள்ளும். இதை வீட்டிலேயே சுலபமாக செய்துவிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்