தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ragi Kali Healthy Breakfast Ready In 5 Minutes Delicious Ragi Kale Isaiah Can Do It

Ragi Kali : ஆரோக்கியமான ப்ரேக் ஃபாஸ்ட்! 5 நிமிடத்தில் ரெடி! சுடசுட சுவையான ராகி களி! ஈசியா செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2024 12:00 PM IST

Ragi Kali : ஆரோக்கியமான ப்ரேக் ஃபாஸ்ட்! 5 நிமிடத்தில் ரெடி! சுடசுட சுவையான ராகி களி! ஈசியா செய்யலாம்!

Ragi Kali : ஆரோக்கியமான ப்ரேக் ஃபாஸ்ட்! 5 நிமிடத்தில் ரெடி! சுடசுட சுவையான ராகி களி! ஈசியா செய்யலாம்!
Ragi Kali : ஆரோக்கியமான ப்ரேக் ஃபாஸ்ட்! 5 நிமிடத்தில் ரெடி! சுடசுட சுவையான ராகி களி! ஈசியா செய்யலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

மாவில் ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் ராகி மாவை சேர்த்து கிளறவேண்டும். 3 நிமிடங்கள் தொடர்ந்து கிளறினால், ராகி களி தயார். 2 நிமிடங்கள் அடுப்பை அணைத்து மூடி வைத்துவிடவேண்டும்.

பின்னர் கையில் எண்ணெய் தடவி, தொட்டுப்பார்த்தால் கையில் ஒட்டாத பதத்தில் வரும். இப்போது ராகி களி சாப்பிட தயாராக உள்ளது.

இதனுடன் புளிக்குழம்பு, பூண்டு குழம்பு, கடலைச்சட்னி சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

ராகியின் நன்மைகள்

கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும், ஜீரணத்துக்கும் உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. நீண்ட நேரம் உங்களுக்கு சாப்பிட்ட நிறைவான உணர்வை கொடுக்கிறது. இது ஊட்டச்சத்து நிறைந்தது. சுவையானது. இதில் உணவுகளும் எளிதாக செய்துவிடலாம். இது உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்துக்கு பயன்படுத்தலாம்.

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இது சருமத்திற்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அது உங்கள் சருமத்தை இளமையுடன் வைக்க உதவுகிறது. சருமத்துக்கு பளபளப்பையும் கொடுக்கிறது. இது உங்கள் பளபள சருமத்துக்கும், இளமை தோற்றத்துக்கும் சிறந்தது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரும்பு மற்றும் துத்தநாகச்சத்துக்கள் நிறைந்தது. இந்த முக்கிய சத்துக்கள் முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. வழக்கமாக ராகி எடுத்துக்கொள்வது தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. ராகியில் உள்ள கால்சியத்துக்கு நன்றி கூறவேண்டும். ஏனெனில் இது எலும்பை உறுதிப்படுத்துகிறது. இதனால் எலும்பு முறிவுகள் சீராகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உணவுடன் உங்களின் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் உள்ளது. உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினீர்கள் என்றால் அதற்கு ராகி ஒரு சிறப்பான தேர்வாகும்.

நீங்கள் குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது. அதில் மறைந்துள்ள குளூட்டன்கள் குறித்து கவலைவேண்டாம். அதுவும் பாதுகாப்பானதுதான். உங்கள் உணவை சுவையாக்கும் வழிகளுள் ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ராகி மாவு குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பல்வேறு உணவுகளில் சேர்க்கப்பட்டு, குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கிறது.

ராகியில் கொழுப்பு அல்லது சோடியச்சத்து இல்லை. கூடுதலாக இதில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகரிக்க உதவுகிறது. ஹெச்டிஎல் கொழுப்பு நன்மை தரும் கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது. இதய நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ராகியில் உள்ள இரும்புச்சத்தின் மூலம் ரத்த சிவப்பணுக்களை உருவாக்கி அனீமியாவை எதிர்த்து போராடுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்