தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ragi Idly Dosa Batter Ragi Idly Dosa Batter Grinding Is This Full Of Flavor And Health

Ragi Idly, Dosa Batter : ராகி இட்லி, தோசை மாவு அரைக்கும் பக்குவம் இதுதான்! சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Mar 30, 2024 07:40 AM IST

Ragi Idly Dosa Batter : எப்போது இட்லி மாவுக்கு அரிசி மற்றும் உளுந்து அளவுகள்தான் மிகவும் அவசியம். அவை சரியாக இருந்தாலே போதும். இட்லி, சோசை மிருதுவானதாகவும், சுவை நிறைந்ததாகவும் இருக்கும்.

Ragi Idly, Dosa Batter : ராகி இட்லி, தோசை மாவு அரைக்கும் பக்குவம் இதுதான்! சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!
Ragi Idly, Dosa Batter : ராகி இட்லி, தோசை மாவு அரைக்கும் பக்குவம் இதுதான்! சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!

ட்ரெண்டிங் செய்திகள்

உளுந்து – அரை கப்

அவல் – ஒரு கப்

செய்முறை

ராகி, அவல், உளுந்து என மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஓரிவு ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் காலையில் நன்றாக அலசிவிட்டு, ஒரு மிக்ஸிஜாரில் அல்லது கிரைண்டரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் 8 மணி நேரம் புளிக்க வைத்து, உப்பு சேர்த்து இட்லிகளாகவோ அல்லது தோசைகளாகவோ வார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ராகி இட்லி அல்லது தோசைகளை சூடாக தேங்காய், தக்காளி சட்னி, அவியல், கெட்டி சாம்பார், கிரேவி என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம். அசைவ குழம்புகளும், இதற்கு சரியான ஜோடிதான்.

இதனுடன் அரிசியும் ஒரு கப் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு உளுந்து அளவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதனுடன் சாதாரண இட்லி அரிசி அல்லது பாரம்பரிய அரிசியும் சேர்த்துக்கொள்ளலாம். அவலும் அதேபோல் சிவப்பரிசி அவலும் சேர்த்துக்கொள்ளலாம். 

எப்போது இட்லி மாவுக்கு அரிசி மற்றும் உளுந்து அளவுகள்தான் மிகவும் அவசியம். அவை சரியாக இருந்தாலே போதும். இட்லி, சோசை மிருதுவானதாகவும், சுவை நிறைந்ததாகவும் இருக்கும்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள் 

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது

கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும், ஜீரணத்துக்கும் உதவுகிறது.

உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. நீண்ட நேரம் உங்களுக்கு சாப்பிட்ட நிறைவான உணர்வை கொடுக்கிறது.

சரும சேதத்தை தடுக்கிறது

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இது சருமத்திற்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அது உங்கள் சருமத்தை இளமையுடன் வைக்க உதவுகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரும்பு மற்றும் துத்தநாகச்சத்துக்கள் நிறைந்தது. இந்த முக்கிய சத்துக்கள் முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. ராகியில் உள்ள கால்சியம் எலும்பை உறுதிப்படுத்துகிறது. இதனால் எலும்பு முறிவுகள் சீராகிறது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்கிறது

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

கேன்சருக்கு எதிரான குணம் உள்ளது

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் உள்ளது.

குளூட்டன் இல்லாத டயட்டுக்கு உதவுகிறது

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தையின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது

ராகியில் கொழுப்பு அல்லது சோடியச்சத்து இல்லை. கூடுதலாக இதில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது

ராகியில் உள்ள இரும்புச்சத்தின் மூலம் ரத்த சிவப்பணுக்களை உருவாக்கி அனீமியாவை எதிர்த்து போராடுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்