Ragi Dosa : 10 நிமிடம் போதும்.. பக்காவான ராகி தோசை.. கிரிஸ்பியா சூப்பரான டேஸ்ட்டில் செய்வது எப்படி பார்க்கலாமா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Dosa : 10 நிமிடம் போதும்.. பக்காவான ராகி தோசை.. கிரிஸ்பியா சூப்பரான டேஸ்ட்டில் செய்வது எப்படி பார்க்கலாமா!

Ragi Dosa : 10 நிமிடம் போதும்.. பக்காவான ராகி தோசை.. கிரிஸ்பியா சூப்பரான டேஸ்ட்டில் செய்வது எப்படி பார்க்கலாமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 12, 2025 09:52 AM IST

Ragi Dosa: நீங்கள் ராகி மாவுடன் கூழ் குடித்திருக்கலாம், ஆனால் நீங்கள் எப்போதாவது தோசை முயற்சித்திருக்கிறீர்களா.. ராகி தோசை என்பது ராகியை அரைத்து தயாரிக்கப்படும் தோசை மட்டுமல்ல. ராகி மாவு மற்றும் உப்புமா ரவத்தை கொண்டு உடனடியாக தயாரிக்கப்பட்ட தோசைகளை முயற்சிக்கவும்.

Ragi Dosa : 10 நிமிடம் போதும்.. பக்காவான ராகி தோசை.. கிரிஸ்பியா சூப்பரான டேஸ்ட்டில் செய்வது எப்படி பார்க்கலாமா!
Ragi Dosa : 10 நிமிடம் போதும்.. பக்காவான ராகி தோசை.. கிரிஸ்பியா சூப்பரான டேஸ்ட்டில் செய்வது எப்படி பார்க்கலாமா!

ராகி மாவு தோசை தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. ராகி மாவு - 1 கப்
  2. அரிசி மாவு - 1/2 கப்
  3. உப்புமா ரவை - 1/2 கப்
  4. சீரகம் - 2 டீஸ்பூன்
  5. உப்பு - சுவைக்கேற்ப போதும்
  6. வெங்காயம் - ஒன்று
  7. கேரட் - இரண்டு கேரட் துண்டுகள்
  8. இஞ்சி - சிறிய துண்டு
  9. பச்சை மிளகாய் -1
  10. மிளகு தூள் - ½ ஸ்பூன்
  11. கொத்தமல்லி தழை - 50 கிராம்

தயாரிக்கும் முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ராகி மாவு, அரை கப் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் உப்புமா ரவை, சிறிதளவு சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • பின்னர் அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து எந்த கட்டிகளும் இல்லாமல் கலக்க வேண்டும்.
  • மாவை மூடி வைத்து விடுங்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு அது தடிமனாக மாறும்.
  • ஒரு கப் தண்ணீரை சேர்க்கலாம், அத்துடன் நடுத்தர அளவிலான வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். துருவிய கேரட்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர் அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  • மாவை தோசை ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது , ரவா தோசை போன்றே சூடான தோசை கல்லில் மாவை ஊற்றவும்.
  • இந்த தோசை நன்றாக வெந்த பிறகு கல்லில் இருந்து எளிதாக வரும்.
  • அவ்வளவுதான், ராகி தோசை தயார், உங்களுக்கு பிடித்த சட்னியை சேர்த்து சாப்பிடலாம்.
  • தேங்காய் சட்னியோடு சாப்பிட ருசி அருமையாக இருக்கும்.

ராகி மாவின் நன்மைகள்:

ராகி மாவு எந்த வடிவத்தில் இருந்தாலும் நன்கு ஊட்டமளிக்கிறது மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. எலும்புகள் வலுவடையும். இது இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ராகி மாவால் செய்யப்பட்ட பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது நல்லது. இது முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.