ராகி ஆப்பம்; ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்! பஞ்சுபோல் மிருதுவாக நெஞ்சை அள்ளும்! சாப்பிட்ட திருப்தியைத்தரும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ராகி ஆப்பம்; ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்! பஞ்சுபோல் மிருதுவாக நெஞ்சை அள்ளும்! சாப்பிட்ட திருப்தியைத்தரும்!

ராகி ஆப்பம்; ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்! பஞ்சுபோல் மிருதுவாக நெஞ்சை அள்ளும்! சாப்பிட்ட திருப்தியைத்தரும்!

Priyadarshini R HT Tamil
Dec 11, 2024 10:47 AM IST

ராகி ஆப்பம் செய்வது எப்படி?

ராகி ஆப்பம்; ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்! பஞ்சுபோல் மிருதுவாக நெஞ்சை அள்ளும்! சாப்பிட்ட திருப்தியைத்தரும்!
ராகி ஆப்பம்; ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்! பஞ்சுபோல் மிருதுவாக நெஞ்சை அள்ளும்! சாப்பிட்ட திருப்தியைத்தரும்!

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது. குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதய நோய்களை தடுக்கிறது. அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

தேவையான பொருட்கள்

ராகி மாவு – ஒன்றரை கப்

வடித்த சாதம் – அரை கப்

தேங்காய்த் துருவல் – அரை கப்

பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் ராகி மாவு, வடித்த சாதம், தேங்காய்த் துருவல் மற்றும் பச்சரிசி மாவு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைக்கும்போது தேவையான அளவு தண்ணீரும் சேர்க்கவேண்டும்.

அரைத்த மாவை எடுத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து அரைமணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்துக்கொள்ளலாம். சோடாமாவும் சேர்க்காமலும் ஆப்பம் செய்யலாம் நன்றாகவே இருக்கும்.

தோசை மாவு பதத்துக்கு கரைத்துகொண்ட ஆப்ப மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி எடுத்தால், சுடசுட ராகி ஆப்பம் தயார். இதற்கு தேங்காய்ப்பால் அல்லது வெஜிடபிள் ஸ்ட்டூ அல்லது வெஜிடபிள் கிரேவி, பூண்டு சட்னி, கடலைக் கறி என எதை வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.