Ragi Adai : உங்கள் குழந்தையின் உடல் உறுதியாக வேண்டுமா? இதோ இந்த அடை ஒன்றே போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Adai : உங்கள் குழந்தையின் உடல் உறுதியாக வேண்டுமா? இதோ இந்த அடை ஒன்றே போதும்!

Ragi Adai : உங்கள் குழந்தையின் உடல் உறுதியாக வேண்டுமா? இதோ இந்த அடை ஒன்றே போதும்!

Priyadarshini R HT Tamil
Jan 09, 2024 04:00 PM IST

Ragi Adai : உங்கள் குழந்தையின் உடல் உறுதியாக வேண்டுமா? இதோ இந்த அடை ஒன்றே போதும்!

Ragi Adai : உங்கள் குழந்தையின் உடல் உறுதியாக வேண்டுமா? இதோ இந்த அடை ஒன்றே போதும்!
Ragi Adai : உங்கள் குழந்தையின் உடல் உறுதியாக வேண்டுமா? இதோ இந்த அடை ஒன்றே போதும்!

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

துருவிய தேங்காய் – அரை கப்

பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

ராகி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, துருவிய தேங்காய் இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும். சப்பாத்தி மாவை விட மிருதுவாக இந்த மாவை பிசைந்துகொள்ள வேண்டும்.

இதை மூடிவைத்து 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

தோசைக்கல்லை சூடாக்கி, ஒரு உருண்டை எடுத்து அதில் வைத்து தட்டவேண்டும்.

அல்லது சப்பாத்தி கட்டையில் தட்டியும் தோசைக்கல்லில் சேர்க்கலாம். அடை பதத்திற்கு கொஞ்சம் மொத்தமாக தட்டவேண்டும். இலையில் வைத்து வேண்டுமானாலும் தட்டிக்கொள்ளலாம்.

சுற்றியும் எண்ணெய் சேர்த்து அடையை நன்றாக வேகவிடவேண்டும். இருபுறமும் நன்றாக மொறு மொறுவென வெந்து வரும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூடிவைத்தும் இந்த அடையை சுட்டு எடுக்கலாம். சூடாகவே சாப்பிட சுவை அள்ளும்.

இதில் முருங்கைக்கீரை சேர்த்தும் செய்யலாம். இரும்பு மற்றும் கால்சியச்சத்து இரண்டும் சேர்த்தே குழந்தைகளுக்கு கிடைக்கும். கேரட் துருவி சேர்க்கலாம். குடைமிளகாய், முட்டைகோஸ், வெங்காயத்தாள் என எதுவேண்டுமானாலும் சேர்க்கலாம்.

இதில் சிறிது கோதுமைமாவு சேர்த்து செய்தால், உங்களுக்கு பிசைந்து அடைக்கு தட்ட வழுவழுப்பாக நன்றாக இருக்கும்.

குறிப்பு

இதற்கு தொட்டுக்கொள்ள பெரிதாக ஒன்றும் தேவையில்லை. இருந்தாலும், சட்னி, சாம்பார் என அனைத்தும் இதற்கு ஒரு நல்ல காம்பினேசன்தான்.

ராகியின் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.