முள்ளங்கி கீரையில் 8 நன்மைகள் உள்ளது! காயை சமைத்துவிட்டு, கீரையை கூட்டு அல்லது பொரியல் செய்துவிடுங்கள்!
முள்ளங்கி கீரையில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
முள்ளங்கி கீரையை நீங்கள் தூக்கி வீசக்கூடாது. அதையும் சமைத்து சாப்பிடவேண்டும். ஏனெனில் அதில் 8 நன்மைகள் உள்ளன. எனவே காயை சமைத்துவிட்டு, கீரையை பொரியல் அல்லது கூட்டு செய்துவிடுங்கள். முள்ளங்கி கீரையின் நன்மைகள் என்னவென்று பாருங்கள். முள்ளங்கி கீரையை நீங்கள் பனிக்காலத்தில் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இதை நீங்கள் பராத்தாவில் சேர்த்து செய்யலாம் அல்லது சாலட்கள் அல்லது கறிகளில் சேர்த்து செய்யலாம். இதன் வேர்களும் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இலைகளை பெரிதாக யாரும் கண்டுகொள்ளாமல் தூக்கி வீசிவிடுகிறார்கள். இந்தக் கீரையை நீங்கள் சாப்பிட வேண்டியதற்கான 8 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
முள்ளங்கி கீரையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய மினரல்களான கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கின்றன. இது உங்களின் எலும்பு ஆரோக்கியத் மற்றும் கண் பார்வைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
செரிமான ஆரோக்கியம்
முள்ளங்கி கீரையில் உயர் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் இந்தக் கீரை உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் குடலின் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது
முள்ளங்கி கீரை இயற்கை கழிவுநீக்கியாகும். இவை கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. அவற்றின் திறனை மேம்படுத்துகின்றன. உங்கள் உடலை சமநிலையில் வைக்கிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
முள்ளங்கி கீரையில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. குளிர் காலங்களில் ஏற்படும் சளி போன்ற பருவ கால தொற்றுநோய்களில் இருந்து உங்கள் உடலை காக்கிறது.
சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
முள்ளங்கி கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன. இவை சரும சேதத்தைக் குறைக்கின்றன. ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமத்தைக் கொடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் உங்கள் சருமத்தை சரிசெய்து, உங்களுக்கு தேவையான புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
முள்ளங்கி கீரை, குறைந்த கிளைசமிக் உணவுகளுள் ஒன்றாகும். இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த உணவாகும்.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
முள்ளங்கி கீரையில் உள்ள சக்திவாய்ந்த உட்பொருட்கள், உங்கள் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் ஆர்த்ரிட்டிஸ் போன்ற நிலைகளைப் போக்குகிறது. மற்ற மூட்டு தொடர்பான பிரச்னைகள் பனிக்காலத்தில் மோசமடைந்துவிடாமல் தடுக்கிறது.
முள்ளங்கி கீரையை எப்படி பயன்படுத்துவது?
முள்ளங்கி கீரையில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை நீங்கள் சூப்கள், பருப்புகள், பராத்தாக்கள் மற்றும் சட்னிகளில் பயன்படுத்தலாம். இவை கொஞ்சம் கசப்பாகவும், காரமாகவும் இருக்கும். பல்வேறு உணவுகளின் சுவையை அதிகரிக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்