சிக்கனை விட புரதம் அதிகம்; காடை பெப்பர் ஃப்ரை; பல நன்மைகளைத் தரும் ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிக்கனை விட புரதம் அதிகம்; காடை பெப்பர் ஃப்ரை; பல நன்மைகளைத் தரும் ரெசிபி இதோ!

சிக்கனை விட புரதம் அதிகம்; காடை பெப்பர் ஃப்ரை; பல நன்மைகளைத் தரும் ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Jan 05, 2025 02:43 PM IST

காடை ஃப்ரை செய்வது எப்படி என்று பாருங்கள். அப்படியே உங்கள் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் எளிய வழியைப் பாருங்கள்.

சிக்கனை விட புரதம் அதிகம்; காடை பெப்பர் ஃப்ரை; பல நன்மைகளைத் தரும் ரெசிபி இதோ!
சிக்கனை விட புரதம் அதிகம்; காடை பெப்பர் ஃப்ரை; பல நன்மைகளைத் தரும் ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

காடை – 2

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன

பூண்டு – 10 பல்

இஞ்சி – ஒரு இன்ச்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மஞ்சள் தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 4 ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் வறுத்து பொடித்துக்கொள்ளவேண்டும். இஞ்சி-பூண்டை நைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவேண்டும். இஞ்சி-பூண்டு விழுது சேரத்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து நல்ல மையாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து காடையை சேர்த்து கிளறவேண்டும். பொடித்து வைத்துள்ள மிளகு, சோம்பு மற்றும் சீரகத்தூளை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காடை வேகும் வரை கொதிக்க விடவேண்டும். கரம் மசாலாவைத் தூவி பிரட்டி, மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான காடை பெப்பர் ஃப்ரை தயார். காடை விரைவில் வேகாது என்பதால், அதை குக்கரில் வைத்தும் வேகவிட்டுக்கொள்ளலாம். இதை எந்த சாதத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்

நெல்லிக்காயில் ஜாம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 5

வெல்லம் – ஒரு கப்

இஞ்சி – ஒரு துண்டு துருவியது

பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காயை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆறயபின் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை ஒரு கடாயில் சேர்த்து வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். ஜாம் பதத்துக்கு நன்றாக இருகிவந்தவுடன், அதில் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய்ப்பொடி மற்றும் இஞ்சி துருவல் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

அடுப்பை அணைத்து அந்த சூட்டிலே அனைத்தையும் நன்றாக கலந்துவைக்க வேண்டும்.

இதை தோசை, பிரட், சாப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

நெல்லிக்காயின் துவர்ப்பு சுவை சிலருக்கு பிடிக்காது. அவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.