தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Quail Fry Better Than Chicken Spicy Quail Roast Check It Out Now

Kadai Fry : சிக்கனைவிட சிறந்தது! காரசாரமான காடை வறுவல்! இப்டி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Feb 10, 2024 11:51 AM IST

Quail Fry : சிக்கனைவிட சிறந்தது! காரசாரமான காடை வறுவல்! இப்டி செஞ்சு பாருங்க!

Kadai Fry : சிக்கனைவிட சிறந்தது! காரசாரமான காடை வறுவல்! இப்டி செஞ்சு பாருங்க!
Kadai Fry : சிக்கனைவிட சிறந்தது! காரசாரமான காடை வறுவல்! இப்டி செஞ்சு பாருங்க! (yummy tummy aarthi)

ட்ரெண்டிங் செய்திகள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 1

ஏலக்காய் – 1

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

கல் உப்பு – தேவையான அளவு

தக்காளி – 1

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மல்லித்தூள் – 1 ஸ்பூன்

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

தேங்காய்ப்பால் – அரை கப்

மல்லித்தழை – கைப்பிடி

செய்முறை

ஒரு மண் கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை, முழு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன், அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

தக்காளி சேர்த்து நன்றாக மசியவிடவேண்டும். அடுத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் கழுவி வைத்த காடைகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும்.

கடைசியாக தேங்காய் பால் சேர்த்து, சிறிது நேரம் மூடிவைத்து கொதிக்க விட்டு, மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான காடைக்கறி தயார்.

இதை சாதம், டிஃபன் என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

குவில் என்று ஆங்கிலத்திலு அழைக்கப்படும் காடை ஒரு சிறிய பறவை. இது தமிழகத்தில் பெரியளவில் பயன்படுத்தப்படவில்லை. காடை குறித்து உலகளவில் பெரிய ஆய்வு உள்ளது. காடை முட்டை மற்றும் இறைச்சி கோழியைவிட சிறந்தது. சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் காடை குறித்து அதிகளவில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் உள்ள சில பிரத்யேக சத்துக்கள் வேறு எந்த இறைச்சியிலும் கிடையாது.

காடையில் அதிகளவில் புரதங்கள், வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்துக்கள் மற்றும் மேக்ரோ நியூட்ரியன்ட்கள் உள்ளன. கால்சியம், பாஸ்பர், சிங்க் உளிட்ட சத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கின்றன.

வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி ஆகிய வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன. காடை இறைச்சியில் செலினியச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. காடை முட்டைகள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். இதில் இரும்பு, சிங்க், அmமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

காடை முட்டைகள் அனீமியாவுக்கு தீர்வு கொடுக்கின்றன. இதில் வைட்டமின் பி12, ஏ மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. ஒரு காடை ஒரு நேரத்தில் 10 முதல் 20 முட்டைகளை இடுகிறது. சிறிது தூரம் மட்டுமே பறக்கக்கூடிய பறவை.

எனவே காடை இறைச்சி மற்றும் முட்டைகளை அதிகளவில் உணவில் சேர்த்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுங்கள். காடையில் பிரியாணி, காடை 65, காடை பெப்பர் ஃப்ரை போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். அவை எளிதாக செய்யக்கூடியதும் ஆகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்