EV Battery: லி-அயன் பேட்டரிகளின் ஆயுளை இரட்டிப்பாக்க ஃபிரான்ஸ் இன் BE ENERGY நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த PURE EV
EV Li-Ion Batteries: லி-அயன் பேட்டரிகளின் ஆயுளை இரட்டிப்பாக்க ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த BE ENERGY நிறுவனத்துடன் இந்தியாவின் PURE EV நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான PURE EV நிறுவனம், BE Energy (ஃபிரான்ஸ் இன் முன்னணி காலநிலை தொழில்நுட்ப நிறுவனம்) நிறுவனத்துடன் இந்தியாவில் மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த கூட்டணியானது, மின்சார இயக்கத்தின் நிலைத்தன்மை மற்றும் டிகார்பனைசேஷன் முயற்சிகளை மேம்படுத்துகின்ற அதிநவீன Li-Ion பேட்டரி மறுசீரமைப்பு தொழில்நுட்பத்தை இந்திய சந்தையில் கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லி-அயன் பேட்டரி மறுசீரமைப்பு
பேட்டரி மறுசீரமைப்பில் ஒரு உலகளாவிய முன்னணி நிறுவனமான BE Energy, இந்த கூட்டாண்மை மூலம் தனது இந்திய செயல்பாடுகளை தொடங்கும். இந்த கூட்டாண்மை BE Energy நிறுவனத்திடமிருந்து காப்புரிமை பெற்ற உயர் தொழில்நுட்ப உபகரணங்களை PURE EVஇன் காப்புரிமை பெற்ற BatricsFaradayTM தொழில்நுட்பத்துடன் இணைந்து பயன்படுத்தும்.
இந்தியாவில் லி-அயன் பேட்டரி மறுசீரமைப்பு துறையில் முதல் இணையவழி சில்லறை விற்பனை நிறுவனமாக நிலைநிறுத்துவதே இந்த கூட்டு இணைப்பின் நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு/புத்துயிராக்க செயல்முறை, புதிய பேட்டரிகளின் தேவையை குறைக்கும், இதனால் ஒட்டுமொத்த செலவுகளும் குறையும் என்பதால், இந்த கூட்டாண்மை EV உரிமையாளர்களுக்கு நீண்ட கால செலவுகளை சேமிக்க வழிவகுக்கும். தூய்மையான, மிகவும் நிலையான போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் மாற்றத்தை மேலும் துரிதப்படுத்துகின்ற வகையில் வணிக வங்கிகள் மற்றும் NBFCகளின் பேட்டரி ஆயுள் சுழற்சியின் மீதான நம்பிக்கையை மறுவரையறை செய்ய இந்த கூட்டாண்மை தயாராக உள்ளது.
இந்தக் கூட்டாண்மை குறித்து PURE EV நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நிஷாந்த் டோங்கரி கூறியவாதவது, "BE Energy நிறுவனத்துடனான எங்களது கூட்டாண்மையானது, நீடித்த உழைப்புத்திறன் மற்றும் வாடிக்கையாளர் செலவழித்த பணத்துக்கான உரிய மதிப்பு கொண்ட மின்சார வாகனங்களை உருவாக்கும். PURE EV யின் நீண்ட கால தொலை நோக்குடன் முழுமையாக இது ஒத்துப்போகிறது. இந்தியாவில் BE Energy நிறுவனத்தின் முதல் கூட்டாளராக, பங்குதாரர்களான நிதி நிறுவனங்கள் மற்றும் இறுதிப் பயனர்களிடையே "மறு விற்பனை" மதிப்பு நம்பிக்கையை கொண்டு வருவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது.
அத்துடன், EV இருசக்கர வாகனம் மற்றும் ESS சந்தைகள் ஆகியவற்றின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார்.
BE Energy நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலகளாவிய தலைவரான பெர்ட்ரான்ட் கோஸ்டே இதுபற்றி கூறியதாவது, "PURE EV உடன் ஒத்துழைத்து, எங்களின் அதிநவீன பேட்டரி ரீகண்டிஷனிங் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டாண்மையானது, EV துறையில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கின்ற மற்றும் ஒரு குறைந்த கார்பன் தடயத்துக்கு பங்களிக்கின்ற வகையில் இருக்கும்.
ஆயுள் காலாவதியான மற்றும் குறைபாடுள்ள பேட்டரிகளை மறுசீரமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது."என்று கூறினார்.
PURE EV மற்றும் BE Energy ஆகிய இரண்டு நிறுவனங்களும் நிலைத்தன்மை மற்றும் புதுமைக்கான ஒரு வலுவான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த கூட்டாண்மை இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ முன் முயற்சியுடன் ஒத்துப்போகிறது, பசுமைத் தொழில்நுட்பத்தில் தற்சார்பை நோக்கிய தேசத்தின் உந்துதலை வலுப்படுத்துகிறது. இதன் முதல் ஆலை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கர்மங்காட் IDAவில் 2026இல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PURE EV நிறுவனம் பற்றி
ஐஐடி ஹைதராபாத்தின் i-TICஇல் உருவாக்கப்பட்ட PURE EV, தினசரி பயன்பாட்டுக்கான மின்சார வாகன தொழில்நுட்பத்தை மறுவரையறை செய்கின்ற நிலையான இயக்கத்தில் ஒரு முன்னோடியாக உள்ளது. இந்தியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் மற்றும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட EV உரிமையாளர்களுடன், PURE EV ஆனது சுற்றுச்சூழலுக்கு உகந்த, உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களை நோக்கி மாற்றத்தை வழிநடத்துகிறது.
குறிப்பிடத்தக்க கார்பன் சேமிப்பை வழங்குகின்ற வகையில் இந்த நிறுவனம் 30 ஆயிரம் கிமீ வரம்பைத் தாண்டிய தயாரிப்புகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. 120க்கும் மேற்பட்ட காப்புரிமைகளுடன், PURE EV ஒவ்வொரு தயாரிப்பிலும் உயர் செயல்திறன் மற்றும் புதுமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
PURE EV பற்றி மேலும் அறிய https://www.pureev.in/ இணையத்தளத்தை பார்வையிடுங்கள்
Be Energy நிறுவனம் பற்றி
ஃபிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள அவிக்னான் ஐத் தலைமை இடமாகக் கொண்ட ஒரு காலநிலை-தொழில்நுட்ப நிறுவனமான Be Energy, ஒரு பெருகிய முறையில் டிகார்பனேட்டட் தொழில்துறை மற்றும் EV சந்தைக்கு வழிநடத்தும் முன்னோடியாக உள்ளது. அவர்கள் பேட்டரிகள் மற்றும் எண்ணெய்களுக்கான மீளுருவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு தீர்வுகளில் உலகளாவிய சந்தைத் தலைவர்களாக உள்ளனர்.
அவர்களின் தொழில்நுட்பம், செலவு குறைந்த மற்றும் குறைந்த கார்பன்-உமிழ்வு கொண்டதாக இருக்கின்ற அதே வேளையில், தொழில்துறையினருக்கு இந்த முக்கிய ஆதாரங்களின் அசல் ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்க அனுமதிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாக உள்ளடக்கிய அணுகுமுறை வேலை உருவாக்கத்தை செயல்படுத்துகிறது. அத்துடன் நிலைத்தன்மையையும் ஊக்குவிக்கிறது.
PURE EV நிறுவனத்துடன் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த கூட்டாண்மை, EV வாகனங்களுக்கான நீண்டகால மற்றும் நம்பகமான பராமரிப்பு சுற்றுச்சூழலை உருவாக்குவதன் மூலம் EV துறை மற்றும் அதன் ஒட்டுமொத்த மீள்தன்மையை மேம்படுத்த பங்களிக்கும்.
PURE EV பற்றி மேலும் அறிய https://be-energy.net/en/ இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: mangirish.dhume@adfactorspr.com
srikanth.g@purenergy.co.in

டாபிக்ஸ்