பூசணிக்காய் கூட்டுக்கறி : கேரளா ஸ்டைலில் பூசணிக்காய் – தேங்காய் கூட்டுக்கறி; சூப்பர் சுவையான ரெசிபி இதோ!
பூசணிக்காய் கூட்டுக்கறி : பூசணிக்காய் சிலருக்கு சாம்பாரில் சேர்த்து சாப்பிட பிடிக்காது. அவர்கள் இதுபோன்ற ஒரு பருப்பு கூட்டுக்கறியாக செய்து சாப்பிடும்போது, அது வித்யாசமான சுவையைத் தரும். இதை உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பூசணிக்காயுடன் தேங்காய் மற்றும் பாசிபருப்பு சேர்த்து செய்யப்படும் கூட்டுக்கறியை சாதம் மற்றும் டிபஃன் என இரண்டுடனும் சேர்த்துக்கொண்டு சாப்பிடலாம். இது சூப்பர் சுவையைக் கொண்டதாக இருக்கும். பூசணிக்காய் சிலருக்கு சாம்பாரில் சேர்த்து சாப்பிட பிடிக்காது. அவர்கள் இதுபோன்ற ஒரு பருப்பு கூட்டுக்கறியாக செய்து சாப்பிடும்போது, அது வித்யாசமான சுவையைத் தரும். இதை உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
• பூசணிக்காய் – கால் கிலோ
• பாசிப்பருப்பு – கால் கப்
• உப்பு – தேவையான அளவு
• மஞ்சள் தூள் – கால் கப்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
• தேங்காய்த் துருவல் – ஒரு கப்
• வர மிளகாய் – 6
• சின்ன வெங்காயம் – 6
• பூண்டு – 4 பல்
தாளிக்க தேவையான பொருட்கள்
• தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
• வர மிளகாய் – 1
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
1. பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். பாசிப்பருப்பை அலசி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பூசணிக்காய் துண்டுகளையும் சேர்த்து குக்கரில் வைத்து 5 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். குக்கர் ரிலீஸ் ஆனவுடன் அதைத் திறந்து கடைந்துகொள்ளவேண்டும்.
2. துருவிய தேங்காய் மற்றும் வர மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு என அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
3. பூசணிக்காய் பருப்பு கலவையில் இந்த மசாலாவை சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து தண்ணீர் வீட்டு கொதிக்கவிடவேண்டும். குறைவாக தீயில் நன்றாக வேகவிடவேண்டும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு தாளிக்கவேண்டும். அது வெடித்தவுடன், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்க்கவேண்டும். இந்த தாளிப்பை பூசணிக்காய், பாசிப்பருப்பு கலவையில் சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்துவிடவேண்டும்.
மேலும் வாசிக்க - தஞ்சாவூர் உரப்பு அடை எப்படி செய்வது தெரியுமா? சைட் டிஷ் தேவையில்லை!
ஒரு கொதிவிட்டு, இறக்கினால் சூப்பர் சுவையான பூசணிக்காய் பருப்புக்கறி தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள் அத்தனை சுவையானது. காரம் இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்புவார்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்