Pulicha Keerai Sadham : புளிச்ச கீரை சாதம்! லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pulicha Keerai Sadham : புளிச்ச கீரை சாதம்! லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!

Pulicha Keerai Sadham : புளிச்ச கீரை சாதம்! லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Oct 10, 2023 01:00 PM IST

Pulicha Keerai Sadham : புளிச்ச கீரை சாதம், ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி, சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது.

Pulicha Keerai Sadham : புளிச்ச கீரை சாதம்! லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!
Pulicha Keerai Sadham : புளிச்ச கீரை சாதம்! லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!

புளிச்ச கீரை சாதம் செய்ய நாம் கீரையை முதலில் கடைந்துவிடவேண்டும். பின்னர் வடித்த சாதத்தில் அதை கலந்துவிட புளிச்ச கீரை சாதம் சாப்பிட தயாராகிவிடும். இந்த புளிச்ச கீரை கடைசலை நீங்கள் பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் ஃபிரிட்ஜில் 15 நாட்கள் வரை சேமிக்க முடியும். இதை செய்வது எளிது. நீங்கள் கொஞ்சம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இதை செய்து வைத்துக்கொண்டீர்கள் என்றால், பரபரப்பான நேரத்திற்கு சூடாக சாதம் மட்டும் வடித்து, தொட்டுக்கொள்ள கொஞ்சம் அப்பளம், வத்தல் என பொறித்துக்கொண்டாலே போதும்.

புளிப்பு சுவையில் வித்யாசமாக இருக்கும் இந்த புளிச்ச கீரை சாதம் நிச்சயம் உங்கள் குடும்ப உறுப்பினர்களை கவரும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

புளிச்சக்கீரை சாதம் செய்ய தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 5

பச்சை மிளகாய் - 5

பெருங்காய தூள் – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

புளிச்சக்கீரை - 1 கட்டு

புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு புளியை கரைத்து எடுத்த 2 கப்

வடித்த சாதம் – 2 கப்

உப்பு – தேவையான அளவு

நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை -

ஒரு கடாயில் நல்லெண்ணெய், வேர்க்கடலை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

அடுத்து சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவேண்டும்.

கடுகு பொரிந்ததும் பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.

பின் புளிச்சக்கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து புளி தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு, குறைந்த தீயில் 15 நிமிடம் வேகவிடவேண்டும். நன்றாக தண்ணீர் வற்றி, கீரை வெந்து மசியலாகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

பின்னர் வேகவைத்த சாதத்துடன் புளிச்ச கீரை மசியலை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

இறுதியாக சிறிதளவு நெய் சேர்த்து சூடாக பரிமாற வேண்டும்.

சுவையான புளிச்சக்கீரை சாதம் சாப்பிட தயாராகிவிட்டது. இதற்கு அப்பளம், ஊறுகாய், வத்தலே போதுமான சைட்டிஷ். ஏதேனும் வறுவல் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை செய்து லன்ச் பாக்ஸில் வைத்துக்கொடுத்தீர்கள் என்றால், உங்கள் குழந்தைகள் கட்டாயம் ஒரு பாக்ஸ் முழுவதையும் காலி செய்திருப்பார்கள்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.