தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puli Kulambu : நாவில் எச்சில் ஊறவைக்கும் கொண்டக் கடலை மற்றும் கத்திரிக்காய் புளிக்குழம்பு!

Puli Kulambu : நாவில் எச்சில் ஊறவைக்கும் கொண்டக் கடலை மற்றும் கத்திரிக்காய் புளிக்குழம்பு!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2024 10:00 AM IST

Puli Kulambu : நாவில் எச்சில் ஊறவைக்கும் கொண்டக் கடலை மற்றும் கத்திரிக்காய் புளிக்குழம்பு!

Puli Kulambu : நாவில் எச்சில் ஊறவைக்கும் கொண்டக் கடலை மற்றும் கத்திரிக்காய் புளிக்குழம்பு!
Puli Kulambu : நாவில் எச்சில் ஊறவைக்கும் கொண்டக் கடலை மற்றும் கத்திரிக்காய் புளிக்குழம்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

கத்திரிக்காய் – 4

தக்காளி – 3

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 7

வர மிளகாய் – 7 (உங்கள் கார அளவுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்)

தேங்காய் துருவல் – அரை கப்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வரமல்லி விதை – 2 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

புளி – எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை -

கொண்டக் கடலையை இரவே ஊற வைக்க வேண்டும் அல்லது 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது குக்கரில் வைத்தும் எடுத்துக்கொள்ளலாம்.

தண்ணீரை வடிகட்டிவிட்டு வெந்த கொண்டைக்கடலையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புளியை சிறிது சுடுதண்ணீர் ஊற்றி ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வைத்து மசாலா அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பிலே குக்கரில் கடலையைபோட்டு புளி கரைத்து ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலவை ஊற்றி, உப்பு, மல்லித்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

இதில் வெங்காயம், தக்காளி மற்றும் கத்திரிக்காயை இன்னொரு கடாயில் எண்ணெய் நிறைய ஊற்றி வதக்கி குக்கரில் போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இதில் சேர்க்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.