Puducherry : என்ன மக்களே? புதுச்சேரி புறப்படலாமா? என்ன பார்க்கலாம்? என்ன சாப்பிடலாம்? இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry : என்ன மக்களே? புதுச்சேரி புறப்படலாமா? என்ன பார்க்கலாம்? என்ன சாப்பிடலாம்? இதோ முழு விவரம்!

Puducherry : என்ன மக்களே? புதுச்சேரி புறப்படலாமா? என்ன பார்க்கலாம்? என்ன சாப்பிடலாம்? இதோ முழு விவரம்!

Priyadarshini R HT Tamil
Published Feb 24, 2025 07:00 AM IST

Puducherry : புதுச்சேரி புறப்படலாமா? என்ற இந்த இரண்டு நாள் தொடரில் நீங்கள் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் தங்கினால் எந்த இடங்களையெல்லாம் பார்க்கலாம் என்ற முழுவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை முழுதாக தெரிந்துகொண்டு புதுச்சேரிக்கு செல்லுங்கள்.

Puducherry : என்ன மக்களே? புதுச்சேரி புறப்படலாமா? என்ன பார்க்கலாம்? என்ன சாப்பிடலாம்? இதோ முழு விவரம்!
Puducherry : என்ன மக்களே? புதுச்சேரி புறப்படலாமா? என்ன பார்க்கலாம்? என்ன சாப்பிடலாம்? இதோ முழு விவரம்!

வார் மெமோரியல்

முதலாம் உலகப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாகக் கட்டப்பட்டதுதான் இந்த வார் மெமோரியல் 1971ம் ஆண்டு இது கட்டப்பட்டது. ராக் பீச்க்கு அருகில் காந்தி சிலைக்கு எதிரில் இது உள்ளது. இங்கும் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டும். இந்த இடத்தில் நீங்கள் ஒரு மணி நேரம் செலவிட முடியு.ம

மியூசியம்

வரலாறு விரும்பிகள் கட்டாயம் காண வேண்டிய இடங்களுள் மியூசிம் முக்கியமானது. இங்கு சோழர்கள் மற்றும் பல்லவர்களின் ஆட்சி காலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இயற்கையோடு இயைந்ததாக, பழங்கால மரங்களின் துண்டுகளை அதன் முற்றத்தில் காத்து நிற்கிறது. தேசிய விடுமுறை மற்றும் திங்கட்கிழமைகளில் இது மூடப்பட்டிருக்கும். எனவே அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் திட்டமிடவேண்டும். இங்கு நீங்கள் செலவிட 2 மணி நேரங்கள் தேவைப்படும்.

பாரடைஸ் பீச்

இங்கு நீங்கள் சில மணி நேரங்கள் செலவிடவேண்டும். இதுதான் இந்த நகரிலே சிறந்த இடம். இங்கு நத்தைகள் அதிகம் இருக்கும். இங்கிருந்து சில கற்களையும் நீங்கள் எடுத்து வரலாம். நகரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீச்சை நீங்கள் படகுகள் மூலம் அடையலாம். சுண்ணாம்பார் ரிசாட்களில் போட்கள் கிடைக்கும். இங்கு நீங்கள் செலவிடும் நேரமும், காசுக்கும் ஏற்றது. இங்கு 4 மணி நேரங்கள் இருக்கலாம்.

சர்ச்

இங்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எண்ணற்ற சர்ச்கள் உள்ளன. இரண்டு சர்ச்களை நீங்கள் நடந்தோ அல்லது சைக்கிளிலோ கூட அடையலாம். ஒரு சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டால் நீங்கள் இந்த நகர் முழுவதையும் சுற்றிவிடலாம். இங்கும் நீங்கள் ஒரு மணி நேரம் செலவிடலாம்.

கலங்கரை விளக்கம்

19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம், இதற்கு முன் பகுதியில் உள்ள வெற்றிடம் கலாச்சார, இசை மற்றும் வணிக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இங்கு நீங்கள் மாலையில் சில மணி நேரங்கள் இருக்கலாம்.

சாப்பிடும் இடங்கள்

கேஃபே டேஸ் ஆர்ட்ஸில் நீங்கள் காலை உணவு சாப்பிடலாம். ஆர்டிகா கஃபே காலரி, மோட்டர் சைக்கிள் கஃபே ஆகியவையும் புதுச்சேரியின் தனித்துவமான உணவுகளையும் வழங்குகின்றன. கேஃபே ஓலேவில் காபி, ஷேக்குகள், பிரவுனி ஆகியவை மிகவும் அருமையாக இருக்கும். மேலும் உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கும் எண்ணற்ற சுவையான உணவுகளை நீங்கள் இங்குள்ள கஃபேக்களில் சாப்பிட்டு மகிழலாம். இங்குள்ள கேஃபேக்களில் உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்துவிட்டு, உங்கள் இரண்டு நாட்கள் சுற்றுலாவை முடித்துக்கொள்ளலாம்.

இந்த இரண்டு நாட்களும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான ஒரு சுற்றுலாவை புதுச்சேரியில் சுற்றி நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள். நீங்கள் இன்னும் சில நாட்களும் தங்கலாம், உறக்கம், சாப்பாடு என நீங்கள் மகிழலாம். இங்கு வந்து செல்லும் நாட்களில் நீங்கள் அழகிய நினைவுகளைக் கொண்டு செல்ல முடியும்.