Puducherry Tour : போலாமா புதுச்சேரி! மரபுச் சுற்றுலாவில் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பேட்டி
Puducherry Tour : புதுச்சேரியில் கடற்க்கரை மட்டுமல்ல நீங்கள் கண்டுகளிக்க மரபு சார்ந்த இடங்கள் எண்ணற்றவை உள்ளது என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திருச்சி பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் மரபுச் சுற்றுலாவில் நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்களாக திருச்சி கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பார்த்திபன் கூறியவை எவை என்று தெரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்த பார்த்திபன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது -
புதுச்சேரி மரபு சுற்றுலாவில் நாம் நேற்று திருவக்கரை, கிளியூர் அகஸ்தீஸ்வரர் கோயில் மற்றும் கேன்யான் ஆகிய இடங்கள் குறித்து பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கவுள்ள இடம். மரக்காணத்தில் உள்ள சிவன் கோயில்.
மரக்காணம் சிவன் கோயில்
ராஜாராஜாசோழன் காலத்தில் கட்டப்பட்டது. அவருக்கு பின்னர் வந்த மன்னர்களின் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கோளில் எயிர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த எயிர் என்றால், எயினர்கள் இருந்த பகுதியாகக் கருதப்படுகிறது. எயினர்கள் என்ற பிரிவினர் இருந்த பகுதி மருவி எயிர் பட்டினமாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்தக்கோயிலிலும் முற்கால சோழர்களின் சிற்பங்கள் உள்ளன. இங்கு உப்பளம் இருந்துள்ளது. அதற்கான தகவல்கள் கல்வெட்டுக்களிலும் உள்ளது. இங்க ராஜாராஜா சோழன் பேரளம் என்ற உப்பள பாத்திக்கள் உள்ளது. அதில் சிவன் கோயில் பராமரிக்க உப்பள பாத்திகள் தானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் கல்வெட்டுகளில் உள்ளது. இந்தக்கோயில் பூமிஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அரிகந்தம் சிற்பம் உள்ளது. அரிகந்தம் என்றால், வேண்டுதல் வைத்து, காணிக்கையாக அவர்களின் தலைமை அவர்களே வெட்டிக்கொள்லவார்கள்.
உலகாபுரம்
உலகாபுரம் என்றால், ராதா ஈஸ்வரன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஊர். லோகமாதேவிபுரம் என்ற பெயர் மருவி உலகாபுரம் என மாறியுள்ளது. லோகமாதேவி என்பவர் ராஜராஜ சோழனின் மனைவிகளுள் ஒருவர். இந்த ஊரில் ஒரு சிவன் மற்றும் பெருமாள் கோயில் உள்ளது. இந்த பெருமாள் கோயில் அருஞ்சிகை விண்ணகரம் என்று அழைக்கப்படுகிறது. அது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. அருஞ்சிகை விண்ணகரம் என்பது, அருஞ்சிகை சோழரின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பெருமாள் கோயில் ஆகும். அருஞ்சிகை சோழர், ராஜாராஜா சோழனின் தாத்தா. ராஜா ராஜா சோழனின் தந்தை சுந்தர சோழனின் பெயரில் இந்த ஊரில் ஒரு சவணப்பள்ளி இருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. அது பெரும்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க - இந்தியாவின் பிரெஞ்ச் தலை நகரம் புதுச்சேரியில் என்ன உள்ளது?
மசாத்தான் கோயில்
மசாத்தான் கோயில் என்றால் நமது கிராமங்களில் உள்ள அய்யனார் கோயில் போன்றது. இதுவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ராஜாராஜ சோழன் சிவனை வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது. இங்குள்ள கோஷ்ட சிற்பங்கள் மற்றும் பிச்சடாண சிற்பங்களும் முக்கியமானவை மற்றும் அழகானவை. அவை செதுக்கப்பட்ட விதமும் சிறப்பானது. இந்தக்கோயிலும் முற்கால சோழர்கள் காலத்தை சேர்ந்தது.
இதுவே புதுச்சேரியில் நீங்கள் மரபு ரீதியாக பார்க்கவேண்டிய இடங்கள் ஆகும். வழக்கமான கடற்கரையை மட்டுமின்றி இந்த இடங்களையும் பார்த்து புதுச்சேரியும் முழு அழகையும் கண்டு ரசியுங்கள்.

டாபிக்ஸ்