Puducherry Tour : புதுச்சேரியில் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் எடுக்க ஏற்ற இடங்கள்; பாரம்பரியம் முதல் மார்டன் வரை அசத்தும்!
Puducherry Tour : நீங்கள் இன்ஸ்டா இன்புளூயன்சர் என்றாலோ அல்லது புதிய இடங்களுக்குச் சென்று அதை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர் என்றால், புதுச்சேரியில் நீங்கள் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள் எவை என்று பாருங்கள்.

கேஃபே டேஸ் ஆர்ட்ஸ் ரியூ சஃப்ரீன்
இது ஒரு பிரெஞ்சு வில்லா ஆகும். இது பழங்கால பொருட்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட ஒரு கேஃபேவாக மாற்றப்பட்டுள்ளது. இதன் சுவர்கள் மஞ்சள் நிற வண்ணத்தில் கவர்ந்து இழுக்கும். அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும் வித்யாசமானவை. இதன் முற்றம் நீங்கள் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் எடுப்பதற்கு ஏற்ற இடமாகும். இது ஒரு அழகான மற்றும் அமைதியான இடம். பிரெஞ்ச் தமிழ் புதுச்சேரி கலந்த கலவையாக இருக்கும்.
புதுச்சேரி பழைய கலங்கரை விளக்கம்
இது ப்ரோமெனேடுக்கு அருகில் இருக்கும். இது 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கலங்கரை விளக்கமாகும். ஒரே கல்லில் கோடுகள் செதுக்கப்பட்ட உயரமான இந்த இடத்தில் இருந்து ரம்மியமான கடலை ரசிக்கலாம். இது கடல்சார்ந்த மாயம் முதல் எவ்வித மூடுக்கும் ஏற்ற அழகிய இடம். உங்களின் ஃப்ரேம்களை ரம்மியமாக்கும்.
ஸ்ரீ அரபிந்தோ ஆசிரம முற்றம்
கிரே வண்ண காம்பவுண்ட்களுக்குப் பின்னால், இந்த ஆசிரமத்தின் முற்றம், வெள்ளை நிற பளிங்கு சிலையுடன் ஜொலிக்கும். இங்கு ஆன்மீகம் மற்றும் பிரெஞ்சு கட்டிடக்கலை என இரண்டும் சேர்ந்து ஒரு இதமான விசுவலுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும்.
