Puducherry Street Foods : புதுச்சேரியின் தொருவோர உணவுகள்; பாண்டிச்சேரி பயணத்தை மேலும் இனிமையாக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry Street Foods : புதுச்சேரியின் தொருவோர உணவுகள்; பாண்டிச்சேரி பயணத்தை மேலும் இனிமையாக்கும்!

Puducherry Street Foods : புதுச்சேரியின் தொருவோர உணவுகள்; பாண்டிச்சேரி பயணத்தை மேலும் இனிமையாக்கும்!

Priyadarshini R HT Tamil
Published Mar 03, 2025 06:00 AM IST

Puducherry Street Foods : 5 ஸ்டார் ஓட்டல்களில் சாப்பிடும் உணவுகளைவிடவும் ஒருவருக்கு மிகவும் பிடித்துப்போவது இந்த ஸ்டீரிட் ஃபுட்ஸ் எனப்படும் சாலையோர அல்லது தெருவோர உணவுகள்தான். புதுச்சேரி சாலையோர உணவுகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள். அங்கு செல்லும்போது கட்டாயம் சுவைக்க மறக்காதீர்கள்.

Puducherry Street Foods : புதுச்சேரியின் தொருவோர உணவுகள்; பாண்டிச்சேரி பயணத்தை மேலும் இனிமையாக்கும்!
Puducherry Street Foods : புதுச்சேரியின் தொருவோர உணவுகள்; பாண்டிச்சேரி பயணத்தை மேலும் இனிமையாக்கும்!

சாண்விச்கள்

காய்கறி சாண்விச்கள்தான் இங்கு அதிகம் கிடைக்கும் தெருவோர உணவாகும். பிரட் துண்டுகளுக்கு இடையில் வைக்கப்படும் அந்த ஃபில்லிங்குகளுக்கு அளவே இருக்காது. வித்யாசமாக தயாரிக்கப்படும் சாண்விச்கள் பீச் சாலைகளில் பிரபலம். அங்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிவார்கள். அங்கு சரியான நேரத்துக்கு சென்றால் நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையிருக்காது.

சமோசா

நாடு முழுவதும் சமோசாவுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. சாலையோரங்களில் மொறுமொறுப்புடன் சூடாக கிடைக்கும் சமோசாவின் சுவையே அலாதியானது. இங்கும் உருளைக்கிழங்கு சமோசா மற்றும் மட்டன் சமோசாக்கள் மிகவும் பிரபலம். ரயில்வே நிலையத்துக்கு எதிரே எண்ணற்ற தள்ளுவண்டிகளில் மட்டன் சமோசாக்கள் விற்பனை அமோகமாக நடைபெறும்.

மட்டன் ரோல்

கறியை விரும்புபவர்கள், கட்டாயம் மிஷன் சாலையில் விற்கப்படும் மட்டன் ரோல்களை சாப்பிட தவறக்கூடாது. இது புதுச்சேரியில் உள்ள பிரபலமான உணவாகும். காரமான இந்த நான் வெஜ் உணவுகள், அதுவும் மட்டனுடன் சுருட்டப்பட்ட சூடான பராத்தாக்கள் உங்கள் நாவின் சுவை அரும்புகளுக்கு ஒரு சிறப்பான விருந்துதான்.

பானிபூரி

சமோசாபோல் எங்கும் நிறைந்த ஒரு தொருவோர உணவு என்றால் அது பானிபூரி. நாடு முழுவதும் கிடைப்பது, பாண்டிச்சேரியிலும் பிரபலம். இந்த பிரபலமான சாட்டை நீங்கள் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் சாப்பிட்டு மகிழலாம். இங்கு பல்வேறு காய்கறி ஃபில்லிங்குகளுடன் பரிமாறப்படும், புளிப்பு தண்ணீர் கலந்த மொறுமொறுப்பான பானி பூரிக்களை ருசிக்கலாம். அதிக கூட்டமுள்ள கடைகளிலே சாப்பிடுங்கள்.

போண்டா

புதுச்சேரியின் மற்றொரு பிரபலமான ஸ்னாக்ஸ் என்றால் அது போண்டா. போண்டாக்கள் மிஷன் தெருக்களில் விற்பனையாகும். இங்குள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருவருக்கும் விருப்பமானது இந்த போண்டாக்கள். கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்பட்ட காய்கறி கலவை இனிப்பு மற்றும் கார சட்னிகளுடன் பரிமாறப்படும்.

நண்டு மசாலா

கடற்கரையோர நகரில் குறிப்பிட்ட அளவு மீன் உணவுகளை சாப்பிடும் மக்கள் உள்ளார்கள். ரங்கப்பிள்ளை சாலைகளில் விற்கப்படும் நண்டு மசாலாக்களை ருசிக்க மறந்துவிடாதீர்கள். நண்டு மசாலா அனைவருக்கும் விருப்பமான ஒரு கடல் உணவாகும். எந்த நேரத்திலும் சாலையோர கடைகளில் சுவையான நண்டு மசாலாக்கள் கிடைக்கும்.

மசாலா பூரி

இங்குள்ள லெனின் தெருவில் மசாலா பூரிகள் கிடைக்கும். இது பாண்டிச்சேரி ஸ்டைல் சாட் ஆகும். இதில் கொண்டைக்கடலை, பூரி, காரமான மசாலாவுடன் கலந்து தரப்படும். காலை முதலே இது விற்பனை செய்யப்படும்.

கவ்சுவே (Burmese Khow suey)

இது கவுஸ்க்வி என்றும் அழைக்கப்படும் பர்மீஸ் உணவாகும். இது வெஜ் மற்றும் நான்வெஜ் இரண்டு வகையிலும் கிடைக்கும். இது நூடுல்ஸ் உடன் பரிமாறப்படும். இதுவும் மிஷன் தெருவில் விற்கப்படும். ஃபிரஷ் மூலிகைகள் அல்லது கிரிஸ்பி நூடுல்ஸ்கள் வைத்து சாப்பிடலாம். புதுச்சேரியின் தள்ளுவண்டிகளில் நீங்கள் கட்டாயம் இதையும் சுவைக்கவேண்டும்.

அழகான பீச்கள், கலாச்சாரம் மற்றும் பார்க்கும் இடங்கள் மட்டுமல்ல, புதுச்சேரியின் உணவுகளும் பிரபலமானவைதான். பிரெஞ்ச் மற்றும் தமிழ் உணவுகளை அடிப்படையாகக் கொண்டது. புதுச்சேரி உணவுகளுக்கு தனி அடையாளம் உண்டு. எனவே உங்கள் சுவை அரும்புகளை மலரச்செய்யவும் பாண்டிச்சேரிக்கு பயணிக்கலாம்.