Puducherry Mushroom Biryani : அசைவத்தை அலற விடும் புதுச்சேரி ஸ்பெஷல் காளான் பிரியாணி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry Mushroom Biryani : அசைவத்தை அலற விடும் புதுச்சேரி ஸ்பெஷல் காளான் பிரியாணி!

Puducherry Mushroom Biryani : அசைவத்தை அலற விடும் புதுச்சேரி ஸ்பெஷல் காளான் பிரியாணி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 07, 2025 09:12 AM IST

Puducherry Mushroom Biryani : புதுச்சேரி ஸ்பெஷல் காளான் பிரியாணி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பு உண்ணும் சைவ உணவு. அசைவ பிரியாணிக்கு ஈடாக, பல நேரங்களில் அதை விட சுவையாக இருக்கும் இந்த உணவை எப்படி தயாரிப்பது?

Puducherry Mushroom Biryani : அசைவத்தை அலற விடும் புதுச்சேரி ஸ்பெஷல் காளான் பிரியாணி!
Puducherry Mushroom Biryani : அசைவத்தை அலற விடும் புதுச்சேரி ஸ்பெஷல் காளான் பிரியாணி!

புதுச்சேரி ஸ்பெஷல் காளான் பிரியாணி செய்வதற்கான தேவையான பொருட்கள்:

  • காளான் (மஷ்ரூம்) – 200 கிராம்
  • பாசுமதி அரிசி – 1 கப்
  • பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
  • மசாலா தூள் – 1 தேக்கரண்டி
  • மல்லித்தழை 
  • புதினாத்தழை 
  • லவங்கம்
  • ஏலக்காய்
  • கிராம்பு
  • பட்டை
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • நெய் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – 1½ கப்

மேலும் படிக்க | Puducherry Sea Food: புதுச்சேரி கடல் உணவுகளில் பெஸ்ட் வாழை இலை மசாலா மீன் சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ அருமையான ரெசிபி!

புதுச்சேரி ஸ்பெஷல் காளான் பிரியாணி செய்முறை:

பிரியாணிக்கு தேவையான பாசுமதி அரிசியை எடுத்துக் கொண்டு, அதை 20 நிமிடங்கள் ஊறவைத்து வடித்து வைக்கவும். அதன் பின் தேவையான அளவு காளானை எடுத்து, தண்ணீரில் நன்றாக கழுவி, பின் பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். அதன் முழு மசாலாக்களையும் அதில் போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, மசாலா உடன் வதக்கவும். பொன்னிறமாக மாறும் வரை மசாலாவை வறுக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு மையமாகும் வரை வேகவிடவும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய்தூள், மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பின் காளான் துண்டுகளை சேர்த்து, அதனுடன் மல்லித்தழை மற்றும் புதினத்தழையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விடவும்.

இப்போது மசாலா தயாராக இருக்கும் போது, அரிசியை அதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடவும். அதன் பின்12 நிமிடங்கள் வரை, வேக விடவும். அந்த நேரத்தில், அடுப்பை குறைத்து வைப்பதை உறுதி செய்யவும். நன்கு வெந்ததும் காளான் பிரியாணி தயாராக இருக்கும். இந்த ஸ்பெஷல் காளான் பிரியாணிக்கு தயிர் பச்சடி அல்லது வெந்தயக் கீரை துவையல் நல்ல சைடுடிஷ் ஆக இருக்கும்.