Puducherry Snails Fry : ‘சத்தானது.. முத்தானது..’ புதுச்சேரி ஸ்பெஷல் நத்தை வறுவல் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry Snails Fry : ‘சத்தானது.. முத்தானது..’ புதுச்சேரி ஸ்பெஷல் நத்தை வறுவல் செய்வது எப்படி?

Puducherry Snails Fry : ‘சத்தானது.. முத்தானது..’ புதுச்சேரி ஸ்பெஷல் நத்தை வறுவல் செய்வது எப்படி?

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 06, 2025 10:35 AM IST

Puducherry Snails Fry : புதுச்சேரியின் ஸ்பெஷல் நத்தை வறுவல், சுற்றுலாப்பயணிகளின் பேவரிட் விருப்பமாக உள்ளது. எப்படி செய்வது நத்தை வறுவல்? இங்கு பார்க்கலாம்.

Puducherry Snails Fry : ‘சத்தானது.. முத்தானது..’ புதுச்சேரி ஸ்பெஷல் நத்தை வறுவல் செய்வது எப்படி?
Puducherry Snails Fry : ‘சத்தானது.. முத்தானது..’ புதுச்சேரி ஸ்பெஷல் நத்தை வறுவல் செய்வது எப்படி?

சரி, புதுச்சேரியின் ஸ்பெஷலாக பார்க்கப்படும் நத்தை வறுவல் செய்வது எப்படி? அதற்கு என்னென்ன தேவை? எனபது குறித்து இங்கு பார்க்கலாம்.

நத்தை வறுவல் செய்ய தேவையான பொருட்கள்

நத்தை – 500 கிராம் (சுத்தம் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்)

வெங்காயம் – 2 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

கரி மசாலா தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய்தூள் – 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் – 1 கப்

கருவேப்பிலை – சில

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு ஏற்ப

கொத்தமல்லி இலைகள் –கடைசியில் தூவுவதற்கு

செய்முறை விளக்கம்:

நத்தை சுத்தமாகத் அலசி எடுத்துக் கொண்டு,  சிறிது நேரம் உப்பு மற்றும் மஞ்சள்தூளுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக நத்தையை வேகவிடவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் சூடாக்குங்கள். அதன் பின் அதில் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கமகம வாசனை வரும் வரை நன்கு வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து நன்கு குழையும்வரை வேக வைக்கவும். அதன் பின் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரி மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்கு சேர்ந்த பின், வேகவைத்த நத்தைக் கறியை சேர்த்து மசாலாவில் நன்றாக கலக்கவும். அதன் பின் சில நிமிடங்கள் அவற்றை வேக வைக்கவும்.

வெந்த பின், எடுத்து வைத்த தேங்காய்ப்பால் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு வெந்த பின், இறுதியில் கொத்தமல்லி இலைகளை அவற்றின் மீது தூவவும். இது சுவையோடு, பார்க்கவும் அழகான தோற்றத்தை தரும். இப்போது நத்தை வறுவல் ரெடியாக இருக்கும். சூடு குறையாமல், அப்படியே அதை உங்கள் குடும்பத்தாருக்கோ,உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ பரிமாறவும்.