Puducherry Poulet Roti : புதுச்சேரி பவுலட் ரொட்டி; சூப்பர் சுவையான பிரெஞ்ச் உணவு! எப்படி செய்வது என பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry Poulet Roti : புதுச்சேரி பவுலட் ரொட்டி; சூப்பர் சுவையான பிரெஞ்ச் உணவு! எப்படி செய்வது என பாருங்கள்!

Puducherry Poulet Roti : புதுச்சேரி பவுலட் ரொட்டி; சூப்பர் சுவையான பிரெஞ்ச் உணவு! எப்படி செய்வது என பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Mar 10, 2025 06:00 AM IST

Puducherry Poulet Roti : புதுச்சேரி பவுலட் ரொட்டி, சிக்கன் ரோஸ்ட்தான் இந்த முழுக்கோழி வறுவல். இதை அவனில் செய்யவேண்டும். எப்படி என்று பாருங்கள்.

Puducherry Poulet Roti : புதுச்சேரி பவுலட் ரொட்டி; சூப்பர் சுவையான பிரெஞ்ச் உணவு! எப்படி செய்வது என பாருங்கள்!
Puducherry Poulet Roti : புதுச்சேரி பவுலட் ரொட்டி; சூப்பர் சுவையான பிரெஞ்ச் உணவு! எப்படி செய்வது என பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• முழு கோழி – 1 (ஒரு கிலோ அளவு, அதற்கு மேல் இருக்கக்கூடாது)

மேரியனேட் செய்ய தேவையான பொருட்கள்

• மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

• முழு பூண்டு – 1

• கடுகு சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்

• ஆலிவ் எண்ணெய் – 50 மில்லி லிட்டர்

அல்லது

• வெண்ணெய் – 50 கிராம்

• உப்பு – தேவையான அளவு

• எலுமிச்சை பழச்சாறு – 3 ஸ்பூன்

ஸ்டஃப்பிங் செய்ய தேவையான பொருட்கள்

• பெரிய வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

• பட்டன் காளான்கள் – 150 கிராம்

• மல்லித்தழை – ஒரு கட்டு

செய்முறை

1. முதலில் மேரியனேட் செய்ய வேண்டும். அதற்கான பொருட்களை அரைக்க வேண்டும். அது என்னவென்று பார்க்கலாம்.

2. மிளகுத்தூள், ஒரு முழு பூண்டை உறித்து அதை தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். கடுகு சாஸ், ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய், எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

3. ஒரு பேக்கிங் ட்ரேயில் கோழியை வைக்கவேண்டும். இந்தக்கலவையை கோழியின் உடல் முழுவதிலும் பூசவேண்டும். இதை நன்றாக கோழியில் உடல் முழுவதும் படும்படி தடவி 2 மணி நேரம் ஊறவிடவேண்டும். அப்போதுதான் இதன் சாறு அனைத்தும் கோழியில் இறங்கும்.

4. அடுத்து எஞ்சிய மேரியனேட் பொருட்களில் வெங்காயம், பட்டர் மஸ்ரூம் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து. கோழியின் உள்புறத்தில் வைத்து நிரப்பவேண்டும். அது வெளியே வந்துவிடாமல் இருக்கு ஒரு டூத் பிக் கொண்டு மூடவேண்டும் அல்லது நூல் கொண்டு கால் பகுதிகளை கட்டவேண்டும். அதிக ஸ்டஃபிங் பொருட்கள் இருந்தால் அதை கோழியை சுற்றி நிரப்பவேண்டும்.

5. அவனை 200 டிகிரி செல்சியஸ் ப்ரீ ஹீட் செய்யவேண்டும். அதில் இந்த மேரியனேடட் சிக்கனை வைக்கவேண்டும். இதை அரை மணி நேரம் கிரில் செய்துகொள்ளவேண்டும். நல்ல பொன்னிறமாக சிக்கன் வெந்து வரவேண்டும். அதுவரை தேவைப்பட்டால் சிக்கனை வறுத்து எடுக்கவேண்டும். சிக்கனில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் பிரிந்துவரும்.

6. அதில் ஒரு குச்சியைவிட்டு குத்தி வெந்துவிட்டதா என பார்க்கவேண்டும். கறி நன்றாக வெந்தவுடன் அவனில் இருந்து எடுக்கவேண்டும். இதை சில நிமிடங்கள் வைக்கவேண்டும். பிரிந்து வந்த எண்ணெயை எடுத்து கோழி முழுவதிலும் தடவவேண்டும். இதனால் எண்ணெய் கோழி முழுவதும் வறண்டு போகாமல் இருக்கும். இதை வெட்டி பரிமாறவேண்டும். உங்களுக்கு பிடித்த ரொட்டியுடன் இதை தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.