Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷல் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கூட்டுக்கறி; ருசியானது; இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷல் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கூட்டுக்கறி; ருசியானது; இதோ ரெசிபி!

Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷல் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கூட்டுக்கறி; ருசியானது; இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Published Mar 01, 2025 06:00 AM IST

Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷலான இந்த காலிஃப்ளவர் கூட்டுக்கறி குருமாவை தக்காளி மசாலா மற்றும் பால் சேர்த்து வெய்யவேண்டும். அதனால் இது வித்யாசமான சுவை கொண்டதாக இருக்கும்.

Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷல் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கூட்டுக்கறி; ருசியானது; இதோ ரெசிபி!
Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷல் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கூட்டுக்கறி; ருசியானது; இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

  1. காலிஃப்ளவர் – 1 பூ (சிறியது, அதை சுத்தம் செய்து, துண்டுகளாக்கி, சூடான தண்ணீரில் போட்டு எடுக்கவேண்டும்)

2. உருளைக்கிழங்கு – 2 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

3. தக்காளி – 1 (மசித்தது)

4. பச்சை மிளகாய் – 2 (தக்காளியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

5. உப்பு – தேவையான அளவு

6. எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

7. பால் – ஒரு டம்ளர்

8. சீரகம் – ஒரு ஸ்பூன்

9. வர மிளகாய் – 2

10. பிரியாணி இலை – 1

11. நெய் – ஒரு ஸ்பூன்

12. கறிவேப்பிலை – ஒரு கொத்து

13. மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், சீரகம், வர மிளகாய்இ கறிவேப்பிலை மற்றும் பிரியாணி இலையை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

2. அடுத்து அரைத்து வைத்த தக்காளி, பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து மிளகாய்த் தூள், பால் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்தவுடன், நெய் மற்றும் மல்லித்தழை சேர்த்து இறக்கவேண்டும்.

3. சூப்பர் சுவையான புதுச்சேரி காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கூட்டு குருமா அல்லது கறி தயார். இதை சூடான சாதம் மற்றும் இட்லி, பூரி, சப்பாத்தி, தோசை, ஆப்பம் போன்ற டஃபன் வெரைட்டிகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைக்குமளவுக்கு சுவையானது. இதை குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிலருக்கு தேங்காய் மசாலா பிடிக்காது. அவர்களுக்கு தேய்காய் சேர்க்காத, பால் சேர்த்த இந்த கிரேவி மிகவும் பிடிக்கும். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்.