Puducherry Nethili Kulambu : ‘வீட்டைத் தாண்டி வீசும் கமகம..’ புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு சமைக்கலாமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry Nethili Kulambu : ‘வீட்டைத் தாண்டி வீசும் கமகம..’ புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு சமைக்கலாமா?

Puducherry Nethili Kulambu : ‘வீட்டைத் தாண்டி வீசும் கமகம..’ புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு சமைக்கலாமா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 06, 2025 11:20 AM IST

Puducherry Nethili Kulambu : நெத்திலி மீன் எல்லா இடங்களிலும் கிடைத்தாலும், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பக்குவம் இருக்கும். அந்த வகையில் புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?

Puducherry Nethili Kulambu :  ‘வீட்டைத் தாண்டி வீசும் கமகம..’ புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு சமைக்கலாமா?
Puducherry Nethili Kulambu : ‘வீட்டைத் தாண்டி வீசும் கமகம..’ புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு சமைக்கலாமா?

புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு சமைக்க தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - 250 கிராம்

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

வெந்தயம் - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் புளி - சிறிதளவு

கருவேப்பிலை - சில

தேங்காய் துருவல் - 1/2 கப்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு ஏற்ப

புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு சமையல் குறிப்பு

முதலில் நெத்திலி மீன்களை நன்கு சுத்தம் செய்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன் பின் உப்பு மற்றும் மஞ்சள்தூள் கலந்து, அவற்றை புரட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, எண்ணெய் சூடானதும்,  வெந்தயத்தை போட்டு அதன் பின், கருவேப்பிலையை அந்த எண்ணெய்யின் சேர்த்து தாளிக்கவும்.

அதன் பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலவை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து , பச்சை வாடை போகும் வரை வதக்கவும். வாசம் வந்த பின், நறுக்கிய தக்காளியை அதில் போட்டு, நன்கு குழையும் வரை வதக்கவும்.  அடிபிடிக்காமல் இருக்க கிண்டி விடலாம். அதன் பின் அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

மசாலா கவலை நன்கு சூடானதும், ஊற வைத்த புளி கரைசலை அதினுடன் சேர்க்கவும். அத்தோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கரைசலை கொதிக்க விடவும். இப்போது  குழம்பாக மாறிய கரைசல் கொதி நிலைக்கு திரும்பும். அப்போது நெத்திலி மீனை அதனுடன்  சேர்த்து, அடுப்பின் வேகத்தை குறைத்து, 10 நிமிடங்கள் வரை மீன் வேகும்படி பார்த்துக் கொள்ளவும்.

மீன் வெந்ததை உறுதி செய்த பின், ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்த்து, கூடுதலாக 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது சுவையான புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு ரெடி. இறுதியில் இறக்கும் முன், கொத்துமல்லியை நறுக்கி, குழம்பின் மீது தூவவும். இது சுவையாகவும், பார்க்க அழகாகவும் உங்கள் குழம்பை மாற்றிவிடும்.