Puducherry Aloo chop : புதுச்சேரி ஸ்பெஷல் ஆலு சாப்; சூப்பர் சுவையான மாலை நேர சிற்றுண்டி! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry Aloo Chop : புதுச்சேரி ஸ்பெஷல் ஆலு சாப்; சூப்பர் சுவையான மாலை நேர சிற்றுண்டி! இதோ ரெசிபி!

Puducherry Aloo chop : புதுச்சேரி ஸ்பெஷல் ஆலு சாப்; சூப்பர் சுவையான மாலை நேர சிற்றுண்டி! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Published Mar 01, 2025 07:00 AM IST

Puducherry Aloo chop : புதுச்சேரி ஸ்பெஷல் ஆலு சாப். இதை செய்வது எளிது. இது சூப்பர் சுவையான மாலை நேர சிற்றுண்டியாகும். இதை திடீர் விருந்தினர்களுக்கு செய்து அசத்தலாம்.

Puducherry Aloo chop : புதுச்சேரி ஸ்பெஷல் ஆலு சாப்; சூப்பர் சுவையான மாலை நேர சிற்றுண்டி! இதோ ரெசிபி!
Puducherry Aloo chop : புதுச்சேரி ஸ்பெஷல் ஆலு சாப்; சூப்பர் சுவையான மாலை நேர சிற்றுண்டி! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• கடலை மாவு – கால் கிலோ

• உருளைக்கிழங்கு – 4

• பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• கேரட் – 1 (துருவியது)

• பச்சை மிளகாய் – 1

• உப்பு – தேவையான அளவு

• கடலை – 100 கிராம்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மல்லித்தழை – சிறிதளவு

• பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

• எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும்.

2. அடுத்து கறிவேப்பிலை, துருவிய கேரட், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

3. உருளைக்கிழங்கை வேகவைத்து, மசித்து இதில் சேர்க்கவேண்டும். அடுத்து மல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி அனைத்தும் சேர்ந்து வெந்தவுடன் இறக்கிவிடவேண்டும். ஆறியவுடன் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருண்டைகளாக இந்த உருளைக்கிழங்கு மசியலை உருட்டிக்கொள்ளவேண்டும்.

4. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் மஞ்சள் ஃபுட் கலர் சேர்க்கலாம் அல்லது மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

5. இதை கெட்டியான மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவேண்டும். இதில் அந்த உருண்டைகளை சேர்த்து முக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்.

6. ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, கடலை மாவில் முக்கி எடுத்த உருண்டைகளை போட்டு பொரித்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய், தக்காளி அல்லது புதினா சட்னிகள் சூப்பர் சுவையானதாக இருக்கும். இது சூப்பரான ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகும். இதை பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு கடலை மாவு உள்ளிட்ட பொருட்கள் வீட்டில் இருந்தால் உடனே செய்து அசத்திவிடலாம். மழைக்கால மாலை நேர சிற்றுண்டி வகைகளுள் இதுவும் ஒன்று.