Mint Leaves Biriyani : கமகம மணம் வீசும், நாவில் எச்சில் ஊறவைக்கும், இப்டி செஞ்சு பாருங்க புதினா பிரியாணி!
Pudhina Biriyani : லஞ்ச் பாக்சுக்கு பட்டுன்னு செய்யலாம். இதுபோல் செய்துகொடுத்தால், குழந்தைகளுக்கு புதினாவின் நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும். ஏனெனில் அவர்கள் புதினாவை தனியாக சாப்பிட மாட்டார்கள். சட்னி செய்தாலும் விரும்பமாட்டார்கள். இதுபோல் புதினா பிரியாணியாக செய்துகொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- அரை ஸ்பூன்
கடலை பருப்பு – அரை ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன் (எண்ணெயில் வறுத்தது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
புதினா மசாலா விழுதுக்காக
எண்ணெய் - 3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 (பொடியாக நறுக்கியது)
புதினா இலைகள் – ஒரு கைப்பிடி ஆய்ந்தது
கொத்தமல்லி இலை - 2 கொத்து
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
புளி - 1 துண்டு (ஊறவைத்தது)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து பொறிந்ததும், நறுக்கிய பூண்டு, இஞ்சி ஆகியற்றை முதலில் வதக்க வேண்டும்.
வதக்கியவற்றுடன் புதினா இலை, கொத்தமல்லி இலை, துருவிய தேங்காய், ஊறவைத்த புளி, தேவையான அளவு உப்பு ஆகிவற்றை சேர்த்து வதக்கிய பின் சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மசாலா விழுதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் நெய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை நிறம் மாறும் வரை வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா விழுது, வேகவைத்த அரிசி சேர்த்து கலக்க வேண்டும்.
குக்கரில் சேர்த்தும் வழக்கமான அளவு விசில் விட்டு எடுத்துக்கொள்ளலாம் அல்லது நேரடியாக வேகவைத்தும் எடுத்துக்கொள்ளலாம்.
வெந்தவுடன் சிறிது நேரம் தம்போட மணமணக்கும் கமகம வாசனையுடன் புதினா பிரியாணி தயாராகிவிட்டது.
நன்றி - ஹேமா சுப்ரமணியம், ஹோம் குக்கிங் தமிழ்.
டாபிக்ஸ்