புரதச்சத்துக்கள் : நீங்கள் தேவையான அளவு புரதம் சாப்பிடவில்லையென்றால், உங்கள் உடலில் என்ன நடக்கிறது?
புரதச்சத்துக்கள் : புரதம், உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளுள் முக்கியமானது. நீங்கள் தேவையான அளவு புரதம் சாப்பிடவில்லையென்றால், உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

உடல் எடை குறைப்பு அல்லது எலும்பு ஆரோக்கியம் மட்டுமல்ல, புரதம் உடல் இயக்கத்தை அதிகரிக்கத் தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகும். எனினும், உங்களுக்கு தினமும் தேவையான அளவு புரதச் சத்துக்கள் கிடைக்கவில்லையென்றால், உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படும்.
அடிக்கடி உடல் நலக்கோளாறுகள்
உங்களுக்கு போதிய அளவு புரசத்துக்கள் கிடைக்கவில்லையென்றால், குறிப்பாக அமிலங்கள் கிடைக்கவில்லையென்றால் அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்கள். ஏனெனில், புரதச்சத்துக்கள், அதிலும் குறிப்பாக அமினோ அமிலங்கள்தான் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனினும், தேவையான அளவு புரதச்சத்துக்ளை நீங்கள் சாப்பிடவில்லையென்றால், உடல் தொற்றுக்களை எதிர்த்து போராட சிரமப்படும். அதனால் உங்களுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படும்.
தொடர் பசி
புரதச்சத்துக்கள் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும். உடல் எடையைக் குறைக்கவும் உதவும். ஆனால் நீங்கள் போதிய அளவு புரதச்சத்துக்கள் எடுத்துக்கொள்ளவில்லையென்றால், உங்களுக்கு பசி ஏற்படும். அடிக்கடி பசி ஏற்பட்டால், நீங்கள் அதிகம் சாப்பிட்டு அது உங்களுக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
வீக்கம்
புரதச்சத்துக்கள், நீர்ச்சத்தை உடலில் சமநிலையில் வைக்க உதவும். புரதச்சத்துக்கள் குறைந்தால், அது உங்கள் திசுக்களில் தண்ணீர் உருவாகக் காரணமாகும். இது வீக்கம், குறிப்பாக வயிற்றுப் பகுதிகள், கால்கள், பாதம் மற்றும் கைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
தலைமுடி, சருமம் மற்றும் நகத்தில் தொல்லைகள்
ஆரோக்கியமான தலைமுடி, சருமம் மற்றும் நகங்களுக்கு புரதச்சத்துக்கள் தேவை. உங்களுக்கு புரதச்சத்துக்கள் குறைபாடு என்றால், உங்களின் முடி உதிரும். சருமம் பொலிவிழக்கும், நகங்கள் கூட எளிதில் உடையும்.
தசையிழப்பு
உங்கள் தசைகளை சரிசெய்து அவற்றின் வளர்ச்சியில் புரதச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் அன்றாட உணவில் புரதச் சத்துக்கள் குறைந்தால், அது உங்களுக்கு நீண்ட கால தசைகள் இழப்பை ஏற்படுத்தும். அது உங்களை சோர்வாக்கும் மற்றும் எப்போதும் சோம்பேறியாக வைத்திருக்கும்.
சோர்வு
உங்களுக்கு போதிய அளவு புரதச் சத்துக்கள் கிடைக்கவில்லையென்றால், உங்களின் தசைகள் முறையாக வேலை செய்யாது. இது சோர்வு மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களின் வளர்சிதை மெதுவாக்கி, ஆற்றலைக் குறைக்கும்.
எலும்பு இழப்பு
புரதச்சத்துக்கள் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்கள் செல்லச்செல்ல புரதச்சத்துக்கள் இழப்பு உங்கள் எலும்புகளை மோசமடையச் செய்கிறது. இது உங்களுக்கு எலும்பு முறிவு போன்ற ஆபத்துக்கள் ஏற்படுவதை அதிகரிக்கிறது.
மனநிலையில் மாற்றம்
புரதச்சத்துக்கள் மூளைக்கு முக்கியமான வேதிப்பொருட்களை உருவாக்குகிறது. அவைதான் உங்கள் மனநிலையை முறைப்படுத்துகின்றன. எனவே போதிய புரதச் சத்துக்களை நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லையென்றால், அது உங்களுக்கு எரிச்சல், பதற்றம் மற்றும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
காயங்கள் ஆற தாமதம்
திசுக்களை சரிசெய்வதில், புரதச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் நீங்கள் புரதச்சத்துக்களை போதிய அளவு எடுத்துக்கொள்ளவில்லையென்றால், அது வெட்டு காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்த நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும்.

டாபிக்ஸ்