Promise Day 2024 : உங்கள் காதலன் அல்லது காதலிக்கு என்ன வாக்குறுதிகளை அளிக்கலாம்? இதோ ஐடியாக்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Promise Day 2024 : உங்கள் காதலன் அல்லது காதலிக்கு என்ன வாக்குறுதிகளை அளிக்கலாம்? இதோ ஐடியாக்கள்!

Promise Day 2024 : உங்கள் காதலன் அல்லது காதலிக்கு என்ன வாக்குறுதிகளை அளிக்கலாம்? இதோ ஐடியாக்கள்!

Priyadarshini R HT Tamil
Published Feb 11, 2024 06:00 AM IST

Promise Day 2024 : உங்கள் காதலன் அல்லது காதலிக்கு என்ன வாக்குறுதிகளை அளிக்கலாம்? இதோ ஐடியாக்கள்!

Promise Day 2024 : உங்கள் காதலன் அல்லது காதலிக்கு என்ன வாக்குறுதிகளை அளிக்கலாம்? இதோ ஐடியாக்கள்!
Promise Day 2024 : உங்கள் காதலன் அல்லது காதலிக்கு என்ன வாக்குறுதிகளை அளிக்கலாம்? இதோ ஐடியாக்கள்!

காதலர் வாரத்தில் இன்று ப்ராமிஸ் தினம், அதாவது வாக்குறுதி தரும் நாள். இந்த நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு என்னென்ன வாக்குறுதிகள் தரலாம்.

நாம் இணைந்திருக்கும் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடுவேன் என்று உறுதி கூறுகிறேன். நமது காதலில் எப்போதும் கட்டுண்டிருப்பேன் இந்த வாக்குறுதி நாளில் உறுதியளிக்கிறேன்.

ஹாப்பி ப்ராமிஸ் டே! உனது வார்த்தைகள் இரவு வானமும் நட்சத்திரங்களையும்போல் இணைந்திருக்கட்டும்.

ஹாப்பி ப்ராமிஸ் டே! நான் உனக்கு அரணாகவும், துணையாகவும், தன்னம்பிக்கையாகவும் இன்றும், எப்போதும் இருப்பேன்.

மகிழ்ச்சியான ப்ராமிஸ் தின வாழ்த்துக்களை உனக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாக்குறுதி நாள், நம்பிக்கை மற்றும் கனவுகளால் நிறைந்திருக்கட்டும் என்று வாக்குறுதியளிக்கிறேன்.

நாம் இன்று வாக்குறுதி நாளை கொண்டாடுகிறோம். உனது வாழ்வை மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் எல்லையில்லா அன்பு சூழ்ந்திருக்கட்டும் என்று வாக்குறுதியளிக்கிறேன்.

இந்த உலகில் அனைத்தும் அழகாக இருக்க வேண்டும் என்பதையே நீ தேடுகிறாய். இறுதியில் நீயும் அழகாகவே மாறிவிடுகிறாய் – டைலர் கென்ட் வொயிட்.

இந்த சிறப்பான நாளில், நீ சாய்ந்துகொள்ளும் தோளாக நான் இருக்கிறேன் என்று நான் வாக்குறுதியளிக்கிறேன். உனது க்ரைம் பார்ட்னராக இருப்பேன். உனது அனைத்து முனைப்புகளிலும், உனக்கு துணையாக நான் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

ஹாப்பி ப்ராமிஸ் டே! இன்று நீ கூறும் அத்தனை வாக்குறுதிகளும், முன்னோக்கிச் செல்லும் நமது வாழ்க்கை பயணத்தின் மூலக்கல் ஆகும்.

இன்றும், தினமும், நான் உன்னை நிபந்தனையின்றி காதலிக்கிறேன். முடிவின்றி மதிக்கிறேன். உனது இறுதிகாலம் வரை நான் உன்னை போற்றுவேன்.

ஒன்றாக இணைந்து சிரிக்க வாக்குறுதியளிக்கிறேன். ஒன்றாக இணைந்து அழுது, ஒன்றான இணைந்து வளர்வோம் என இந்த ப்ராமிஸ் தினத்தில் வாக்குறுதியளிக்கிறேன்.

ஹாப்பி ப்ராமிஸ் டே! உனது ஆற்றலின் மூலமாக நான் இருப்பேன் என்று வாக்குறுதியளிக்கிறேன். உனது மகிழ்வின் மூலமாகவும், உனது எல்லையற்ற அன்பின் மூலமாகவும், இப்போதும், எப்போதும் இருப்பேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்.

வானில் நட்சத்திரங்களைப்போல், வாக்குறுதிகள் மின்ன வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவை உனது பாதைக்கு ஒளி கொடுக்கட்டும்.

ஹாப்பி ப்ராமிஸ் டே! இன்று நீங்கள் பரிமாறிக்கொள்ளும் வாக்குறுதிகள், உங்கள் உறவை எப்போதும் இணைத்துவைத்திருக்கும் ஒன்றாக இருக்கட்டும்.

காதலர் வாரத்தில் 5வது நாள் வாக்குறுதி நாள் அதாவது ப்ராமிஸ் டே. இந்தநாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு இந்த வாக்குறுதிகளை அனுப்பி உங்கள் அன்பின் ஆழத்தை உணர்த்திடுங்கள். இன்னும் இரண்டு நாளில் வரும் காதலர் தினத்திற்கும் தயாரகுங்கள். ஹாப்பி வாலண்டைன்ஸ் டே!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9