Relationship Issues: புதுமண தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இது தான் காரணம்!
Relationship Issues: காதல் திருமணம் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம் என எந்த திருமானமாக இருந்தாலும் சிலரது வாழ்வில் பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அதற்கு காரணம் அந்த தம்பதியினரின் புரிந்து கொள்ளாமையே.

ஒரு ஆணும், பெண்ணும் மனதளவில் ஒன்றாகி திருமணம் எனும் பந்தத்தில் இணைகின்றனர். சில சமயங்களில் இந்தியா போன்ற நாடுகளில் பெற்றோர் மற்றும் உறவினர்களின் பேச்சை கேட்டு திருமணம் செய்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். காதல் திருமணம் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம் என எந்த திருமாணமாக இருந்தாலும் சிலரது வாழ்வில் அந்த திருமணம் பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அதற்கு காரணம் அந்த தம்பதியினரின் புரிந்து கொள்ளாமையே. முதலில் அந்த திருமண வாழ்வினை புரிந்து கொள்ளாமல் விவகாரத்து வாங்க நினைக்கும் பலர் உள்ளனர். அவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை பார்க்காலம்.
போதாத காதல்
முதலில் திருமணம் ஆகி சில மாதங்களில் வரும் முக்கிய பிரச்சனை, ஒருவர் ஆதீதமாக எதிர்பார்க்கும் காதல் கிடைக்காமல் போவதே ஆகும். ஏனெனில் காதலிக்கும் போது இருவரும் பிரிந்த வெவ்வேறு இடங்களில் வாழ்வார்கள். திருமணம் ஆனதும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ வேண்டியதாகி இருக்கும். அப்போதுதான் பிரச்சனயே தொடங்கும். காதலிக்கும் காலத்தில் கிடைத்த அன்பும், அரவணைப்பும் திருமணம் ஆன பின் குறைகிறது.
இதற்கு காரணமாக சிலர் அவர்களது வேலை, குடும்ப சூழ்நிலையை காரணமாக கூறுகின்றனர். சிலர் காதலிக்கும் நபர் மீது அதிக அபசேசேட் ஆக இருப்பர். திருமணம் ஆன பின் அந்த ஆவல் குறைகிறது.